அப்பா..என மெல்ல அழைக்க ஹரிக்கு பேச்சே வரவில்லை....அவள் முதன் முறையாக அப்பா என அழைப்பது போல் இருந்தது அவருக்கு....
சார் patient ரொம்ப strain ஆகி எமோஷன் ஆக வைக்காதீங்க....என நர்ஸ் சொல்ல..
சரி என்று மகளை பார்த்தவாறே வெளியேறினார்....
அடுத்து உள்ளே வந்தது அமுதன்....வேகமாக அவள் அருகே வந்தான்...அவன் கண்ணின் பதட்டத்தை கண்டவளின் உதடுகள் மெல்லிய சிரிப்பில் விரிந்தது....
எழில் மாதிரி நானும் இறந்து போய்டுவேன் என நினைச்சியா???
எழில் மாதிரி உன்னை நினைக்கலை....ஆதி என்னை விட்டு போய் விட கூடாதுனு தான் நினைச்சேன்....
அவள் புன்னகைத்தாள்...என் ஆதிக்கு அவளை யாருடனும் compare செய்வது பிடிக்காது....
உன் ஆதியா??அப்போ உன் ஆதிக்கு எதாவது ஆகி இருந்தா???
என் வாழ்க்கையில கல்யாணம் என்ற அதிகாரம் இல்லை என நினைத்து சந்நியாசம் போய் இருப்பேன் என அவன் சொல்லி முடிக்க இருவருக்கும் சிரிப்பு வந்தது....
ஜீவா....உன் அப்பா....
அவரை பற்றி பேச வேண்டாம்... நீ போலீஸ் கிட்ட வாக்குமூலம் கொடுத்து அவரை பிடித்து போக சொல்.....அவன் குரலில் கடினம் இருந்தது....
அவள் எதும் பேசவில்லை....மருந்தின் வீரியம் குறையாமல் இருந்ததால் மீண்டும் மயக்கத்தில் சென்றாள்....
சுதா உள்ளே செல்ல போக....அவரை ஜீவா தடுப்பதற்குள் ஹரி எழுந்து கதவின் அருகே சென்று மறைத்தார்....கடினமாக இறுகி இருந்தது அவரின் முகம்...விட மாட்டேன் உன்னை உள்ளே என்பது போல் நின்று இருந்தார்...
சுதாவுக்கு ஆத்திரம் வந்தது...ஆனால் இப்போது எதும் பேச முடியாதே...ஏனெனில் இப்போ மொத்த ஊரும் அவருக்கு எதிராக இருக்கிறது...பேசாமல் வீட்டுக்கு கிளம்பினார்...
வீடு வந்ததும் கதவை சாத்திவிட்டு பரசு மேல் சாய்ந்து கதறி அழுதார்...முடியல பரசு..எனக்கு வேற பிள்ளை வேண்டாம் எனக்கு என ஆதி வேண்டும்...ஆதி வேணும்...அவ என்னை மட்டுமே அம்மா அம்மா என சொல்லி சுத்தி வரணும்...பரசு எதாவது பண்ணு என ஆங்காரமாக கத்தினார்.....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..