உறவு 19💞

695 24 4
                                    

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருக்க...விடிந்தது...

காலையிலேயே திரட்டிய ஆதாரங்களுடன் கிளம்பி விட்டாள் ஆதி..அந்த ஃபேக்டரியை சீல் வைக்க....

எல்லா பேப்பர்களையும் எடுத்து கொண்டு அவசரமாக கீழே இறங்கியவளை கண்ட அமுதன் வேகமாக அவள் அருகே சென்றான்...

ஆதி...

சொல்லு ஜீவா...என பேப்பர் எல்லாவற்றையும் சரி பார்த்தாள்...

ஆதி..நேற்று வீட்டுல பேசுனது..பத்தி....

என்ன பேசினான்க???என யோசித்தவள்..ஆமா நம்ம கல்யாணம் பத்தி...அதுக்கென்ன???

இல்ல ...அது...

ஜீவா..கொஞ்சம் சீக்கிரம் சொல்றியா??இதை கொண்டு போய் அந்த chemical ஃபேக்டரியை சீல் வைக்கணும்...

என்ன??எல்லா ஆதாரமும் திரட்டிட்டயா??இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்க??கண்டு பிடிச்சயா????

சற்று யோசித்தாள்...இவன் அப்பா தான் எல்லாவற்றையும் செய்தார் என்று இப்போ கூற வேண்டாம் என யோசித்தவள்...அது...சொல்றேன்..இப்போ நீ சொல்ல வந்ததை சொல்லு...

உனக்கு இஷ்டம் இல்லேனா வேணாம் ஆதி... நீ உங்க அப்பா கிட்ட கூட பேசு...வேற ஒருத்தியை மனசுல வச்சு இருக்கிறவன் கூட உன்னால எப்படி வாழ முடியும்....??

எனக்கு இஷ்டம் இல்லனு நான் சொல்லவே இல்லையே...listen ஜீவா...இப்போ எழில் உயிரோடே இருந்து இருந்தா கண்டிப்பா நானே வேணாம்னு சொல்லி இருப்பேன்...எப்படியும் கல்யாணம் பண்ண தான் போற..இல்லேனா உண்மை விடவும் மாட்டாங்க..எவளோ ஒருத்தியை கல்யாணம் பண்ணி அவளுக்கு எல்லாம் சொல்லி வெயிட் பண்ண வைக்குறதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கோ..நான் வெயிட் பண்றேன்..அதுக்காக ஒரேடியா மாற மாட்டேன்னு மறுத்தா நான் வேற மாதிரி action எடுப்பேன்...நான் எழில் மாதிரி அமைதி கிடையாது....

அப்போ என்னை புடிச்சு தான் கல்யாணம் பன்றியா??கல்யாணத்துக்கு அடிப்படை காதல்..அப்போ நீ??என்னை??

காதலா??அப்படி பார்த்தா இந்த உலகத்துல 80% கல்யாணம் நடக்கவே கூடாதே...look... எங்க அப்பா தான் எனக்கு எல்லாம் ..அவரு சொன்னா என்ன வேனா செய்வேன்...நான் பழகின வரை நிச்சயம் நீ நல்லவன்....உன்னை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை...கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்யும்...அப்போ பார்க்கலாம்...

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now