என்ன விஷயம்??அமுதனிடம் ஆதி கேட்க..அவன் அமைதியாக இருந்தான்...
அவளிடம் சில டப்பாக்களை நீட்டினான்....
அது சற்று நேரத்துக்கு முன் வேதா அவளிடம் காட்டிய அதே டப்பாக்கள்...நான் ஓட்டு கேட்டேன்னு நினைக்க வேண்டாம்....நான் அந்த வழியா போகும்போது நீங்க பேசுறது கேட்டது...இந்த bottle நான் நிறைய பார்த்து இருக்கேன்...ஆனா இதுல இத்தனை விஷயம் எனக்கு தெரியாது....இதுக்கு பின்னாடி நிஜமாகவே யாரும் இருக்காங்களா???
தெரியல அமுதன்...யாரும் இருக்காங்களா??அப்படி யாரும் இருந்தா அவுங்க motive என்ன??இதெல்லாம் கண்டுபிடிக்கனும்.....அவள் யோசனையில் இருக்க..
எங்கோ பார்த்து கொண்டு இருந்த அமுதன் கண்கள் விரிந்தது..
ஏங்க... ஆதி...அங்க பாருங்க...காட்டுக்குள்ள யாரோ போறது மாதிரி இருக்கு...என அவளை திருப்பி காட்டினான்....
பார்த்தவள் அதிர்ந்தாள்...நேற்றும் இதே போல தான் நான் பார்த்தேன்...அது என் பிரம்மைனு நினைச்சேன்....ஆனா???இப்போ என்ன செய்ய??
அவள் கேட்பதற்குள் அவன் படிகட்டில் இறங்கி இருந்தான்....அவளும் பின்னாலே ஓடினாள்.....
வேகமாக காட்டு பக்கம் ஓடியவன் அந்த உருவத்தை பார்த்த இடத்தில் நின்றான்...பின்னாலே ஓடி வந்தவளும் அங்கே நின்றாள்...
இங்க தான பார்த்தோம்....ஆளை காணோம்...என சுற்றும் முற்றும் தேடினர்..
என்ன தேடுறீங்க என வந்து சேர்ந்தான் அபி....
அபி சார்... இங்க ஒருத்தரை நாங்க பார்த்தோம்...நேற்று இரவு நானும் பார்த்தேன்....இதோ இந்த காடு...இதற்குள் எதோ இருக்கு....
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது...அதனால் தான்...இன்னிக்கு தூங்க கூடாதுனு இங்க வந்தேன்....அமுதன்...கண்டிப்பா காட்டுக்குள்ள போகனும்...ஆனா போனால் உங்க ஊருக்கு பதில் சொல்லணும்????
இப்போ கொஞ்ச தூரம் போவோம் சார்...போய்ட்டு விடியிறதுகுள்ள வந்திடுவோம்....அப்புறம் நாளைக்கு பார்க்கலாம்....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..