அப்போது தான் வயலுக்கு தண்ணீர் திறந்து விட போய் உள்ளே நுழைந்தான் அமுதன்.....உள்ளே நுழைந்தவுடன் கண்ணில் பட்டது தந்தையும் ஹரியும் ஒன்றாக செல்வது....
இது சரி இல்லையே என நினைத்து அவர்களை தொடர ஆரம்பித்தான்...
தந்தை மேல் கொலை வெறி இருந்தாலும் காட்ட இது சமயம் இல்லை என்பது அவனுக்கு தெரியும்....முதலில் அந்த ஆதாரங்களை வைத்து ஆதி நிரூபிக்கட்டும்...பின் அவரை வைத்து கொள்ளலாம் என மிகுந்த பொறுமையுடன் இருந்தான்...
அண்ணே..அண்ணே..என பின்னால் சத்தம் கேட்க ..திரும்பினான்...
அண்ணே..அம்மா...உள்ளே....என வந்தவன் திக்க....
என்னடா...என்ன ஆச்சு??
உள்ளே வா அண்ணே..என அவனை கையோடு கூட்டி சென்றான்...தலையில் இரத்தம் வடிய மயங்கி கிடந்த தாயை கண்டவணுக்கு மற்றது மறந்து போய் விட்டது....
அம்மா..என ஓடி சென்று தூக்கினான்...விரைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றான்..ஆள் அனுப்பி பண்ணையாருக்கு தகவல் சொல்ல...போன வேகத்தில் திரும்பினார்..ஹரியும் பண்ணையாரும் வேகமாக மருத்துவமனை வந்தனர்...
என்ன ஆச்சு??வாசு.. வாசு..என அவர் நிஜமாகவே பதறினார்...
உன்னால தான்யா.. நீ பண்ணுன பாவம் இப்படி குடும்பத்துல எப்பப்பாத்தாலும் யாராவது ஹாஸ்பிடல் வந்துட்டு இருக்காங்க....என அடிக்குரலிள் சீறினான்...
அவன் சொல்லுவதில் பொருள் அறியாமல் அவனை நோக்க....
அதற்குள் மருத்துவர் வந்து விட சட்டென அவரை முறைத்து கொண்டே விலகினான்....
ஒன்னும் இல்ல சின்ன காயம் தான் என மருத்துவர் சொல்ல....முதலில் வாசுகியை பார்க்க போனது பண்ணையார் தான்...
அவரின் முகம் நோக்கவும் பிடிக்க வில்லை வாசுவுக்கு....
வாசு..என அவர் அருகே வர...
கை நீட்டி தடுத்தார்....
ஊரே உங்களை தெய்வம் மாதிரி மதிக்குது....ஆனா நீங்க...நமக்கு சோறு போட்ட மண்ணை சுடுகாடா மாத்த பாக்குறீங்க.... இவளோ நாள் உங்க கூட வாழ்ந்த வாழ்க்கை இந்த நிமிஷம் எனக்கு அசிங்கமா இருக்கு...அந்த பொண்ணு ஆதி வரட்டும் எல்லாத்தையும் ஊரு முன்னாடி நிரூபிக்கட்டும்...அப்புறம் இருக்கு உங்களுக்கு...என சொல்லி விட்டு திரும்பி விட்டார்...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..