பரசு இறந்து போனது வருத்தம் தான்....
எனக்கு நிச்சயம் தெரியும் இது உனக்கு தெரியாமல் இருக்காது...பரசு இதை செய்கிறான் என்றதும் ஒரு மனைவியாக நீ தடுத்து இருக்க வேண்டும்....ஒவ்வொரு முறையும் அவன் இழுத்த இழுப்புக்கு சென்று நீ முட்டாள் என நிரூபிக்கிறாய்....போன முறை அவன் சொல் கேட்டு மகளை இழந்தாய்..இம்முறை அவன் சொல் கேட்டு அவனையே இழந்தாய்...உன் முட்டாள்தனத்தை இதோடு விட்டு விடு...அதோட இன்னொரு விஷயம்...இனி உன்னை பாவம் பார்த்து என்னிடம் சேர்த்து கொள்வேன் என்றோ என் மகள் அம்மா என உன்னிடம் வருவாள் என்றோ நினைத்து விடாதே..ஏற்கனவே உன்னை அவளுக்கு பிடிக்காது..இதில் இந்த காரியம் தெரிந்தது என்றால்....
அவ்வளவு தான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை...என அவரின் அருகே சென்று கூறி விட்டு திரும்பியும் பாராமல் அமுதனை கூட்டி கொண்டு சென்றார் .....
அவர் போன திசையை கண்ணீருடன் பார்த்து கொண்டு இருந்தார் சுதா....உண்மையில் தான் செய்தது முட்டாள் தனம் என்றாலும் அவரின் இழப்பு பெரிது தான்...
சடலத்தை ஊருக்கு வெளியிலேயே எரியூட்டினர்....சாம்பலை மட்டும் வாங்கி கொண்டு அவரின் படத்துக்கு முன் வைத்தார்...
அடுத்து என்ன?? இந்த ஊரில் மக்கள் அவரை பார்க்கும் பார்வை, எல்லாம் அவரை அங்கு இருக்கவே கூடாது என முடிவு எடுக்க வைத்தது.....
இரவே ஊரை விட்டு கிளம்பினார்....செல்லும் முன் மகளை ஒரு முறை பார்த்து விட மருத்துவமனை வந்தார்...
அப்போது தான் சாப்பிட்டு முடித்த ஆதி கண்ணாடி வழியே தாய் நிற்பதை கண்டாள்....ஹரி அவரி தடுக்க வில்லை.. ஆதியோ பார்க்க முடியாது என மறுக்க...ஹரி தான் ஒரே ஒரு முறை பேசு என சொன்னார்...அவர் ஊரை விட்டு செல்ல எடுத்து இருக்கும் முடிவையும் சொன்னார்....
தாயும் மகளும் மட்டும் அந்த அறையில்...
என்ன சொல்லணும் என தெரியல...26 வருஷமா உன்னை பார்த்ததும் நிறைய பேசணும்னு மனப்பாடம் போல் பண்ணி வைத்த எதுவும் நினைவு இல்லை....ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நினைவில் உள்ளது....என அவள் முன் கை கூப்பினார்.....மன்னித்து விடு என்ற சொல்லை கூட சொல்ல அருகதை அற்றவள் தான்..ஆனால் அதை தான் கேட்கிறேன்...என்னை மன்னித்து விடு ஆதி.மா.....கண்கள் கலங்கி தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கியது.....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..