சுதா....
உண்மை வேண்டும்....பரசு...இத்தனை வருட வாழ்க்கையில நான் என்னிக்கும் உங்ககிட்ட பொய் சொன்னதில்லை....உங்களுக்காக எல்லாத்தையும் தூக்கி போட்டு வந்தேன்...ஆனா இப்பொலாம் நீங்க பண்ற எதும் சரி இல்ல...எங்க போறீங்க??
பெரு மூச்சு விட்ட பரசு...உண்மையை கூற துவங்கினார்...உனக்காக தான்..உன் சந்தோஷத்துக்கு தான்....அந்த காட்டுக்குள்ள அகோரிகள் இருக்காங்க...அவுங்களை ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது...அப்போ நீ என்னிடம் பேசிகிட்டு இருந்ததை அவர் கேட்டார்....
நமக்கு குழந்தை இல்லை... நீ ஆதியை விட்டு வந்ததுனால தான் குழந்தை இல்லனு நீ அழுத....அப்புறம் நீ அந்த பக்கம் போனதும் என்னை சந்தித்தார்...என் பிரச்சனைக்கு தீர்வு உள்ளதாகவும் அவரை காட்டு பக்கம் சந்திக்கவும் கூறினார்....நானும் அவரை சந்தித்தேன்..அப்போது தான் அவர் சொன்னாரு....நரபலி கொடுத்து கடவுளை பிரிய படித்தினா....நாம நினைச்சது நடக்குமாம்...நாட்டுல பல பேர் இதை செய்றாங்க..நீடித்த ஆயுள் வேண்டும், நிறைந்த செல்வம் வேண்டும் என்பதற்காக இரத்த பலி கொடுத்து கடவுளை பிரிய படுத்துவார்களாம்...கடவுள் அவர்கள் பலியில் மகிழ்ந்து அவர்கள் வேண்டியதை கொடுப்பார்....
பரசு போதும்...இப்படி முட்டா தனமா பேசுறதை நிப்பாட்டுங்க...
நானும் அப்படித்தான் நினைச்சேன் சுதா...ஆனா அதுனால கிடைச்ச சக்தியை வச்சு அந்த அகோரி நெருப்பு எரிய வச்சாரு...அந்த காட்டுக்குள்ள எந்த பயங்கர மிருகமும் அவர் குகை வாசல் வரை வந்தாலும் அதற்குள் நுழைய முடியாது....அவர் கொடுத்த கயிறை கட்டினால் அப்படியே வசியம் ஆகி விடுவர்...நான் நம்ப துவங்கினேன்.....அதுனால...
ஒரு நிமிஷம்.....பரசு...ஊருல பச்சை குழந்தைகள் இறந்து போனதுக்கு நீங்க காரணம்னு மட்டும் சொல்லிடாதிங்க...எனக்கு நெஞ்சு வெடிச்சுடும்...அது மகா பாவம்😨😨😨..
பரசு அமைதியாக இருந்தார்...இன்னும் 2குழந்தைகள் மட்டும்..பலி கொடுத்து விட்டால்.....நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..