அம்ருதா காதலை ஜீவா ஒப்புகொள்ளவே இல்லை...ஆதி தான் பேசினாள் அவனிடம் நிதர்சனத்தை உணர்த்தினால்....அம்ருதா தெளிவாக இருக்கும் போது நீ செய்வது சரி இல்லை...அவள் நிச்சயம் சரியான முடிவு தான் எடுத்து இருப்பாள்...என கூற..
என் நிலைமையில் இருந்து யோசி ஆதி..அப்பா இருந்து இருந்தா ஏற்கனவே குழந்தை இருக்குற ஒருத்தனுக்கு அம்ருவை கட்டி கொடுத்து இருப்பாரா???ஒரு அண்ணனா நான் எப்படி இதை செய்ய...
நீ செய்ய வேண்டாம்..நானே கல்யாணம் பண்ணிக்கிரேன் என அம்ருதா ஒரு புறம் கத்தினாள்...
ஏய்..என தங்கையை அடிக்க கை ஓங்கினன்....
ஜீவா..என ஆதி சத்தம் உயர..கைகளை கீழே இறக்கினான்...
வாசுகி அமைதியாக அமர்ந்து இருந்தார்...
அவர் அருகே சென்றான்....அம்மா...
எழிலை வேணாம் என்ற போது உன்னால மறக்க முடிந்ததா அமுதா???உன் அப்பா இத்தனை பெரிய துரோகம் செய்த போதும் கூட அவரை என்னால் விட்டு கொடுக்க முடிய வில்லையே???இதெல்லாம் காதல் என்றால்??அம்ருதா செய்வதும் காதல் தான்..
ஆனா அம்மா... ஊர் என்ன பேசும்???
நீ எப்ப இருந்து ஊர் பேசுரதை கேக்க ஆரம்பிச்ச அமுதா???10காசு பிரயோஜனம் இல்லாதவங்க பேசுனா என்ன பேசலேனா என்ன??ஊருக்காக யோசிக்காம உன் தங்கச்சி மனசுக்காக யோசி....அவ இங்கயேவா இருக்க போறா??அபி தம்பிக்கு டிரான்ஸ்ஃபர் ஆனா கிளம்பிடுவா....
அவர் சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார்...அமுதன் அங்கேயே அமர்ந்து விட்டான்...
ஆதி தன் ஸ்டிக் வைத்து கொண்டு மெல்ல தன் அறைக்கு சென்றாள்...ஹரி டெல்லியில் வேலை இருப்பதால் இரு நாட்களுக்கு முன் சென்று விட்டார்.... அர்பி வீட்டில் திருமணத்துக்கு ஒத்து கொள்ள வைக்க ஆதி பேசினாள்..அவர்களும் ஒப்பு கொள்ள.. அர்பி PhD thesis சப்மிட் செய்ததும் திருமணம் முடிவாகி இருந்தது.. அர்பியை அவன் பெற்றோர் டெல்லி அழைத்து சென்று விட..காதல் பறவைகள் தங்கள் ஃபோனில் காதல் வளர்த்தனர்...❣️❣️❣️
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..