..............ஃபிளாஷ் பேக்......
12 ஆம் வகுப்பு அரசு தேர்வு ஆரம்பம் அன்று....அப்போது தான் சிறிதாக அரும்பிய மீசையுடன் பள்ளி வாசலில் நின்று கொண்டு இருந்தான் அமுதன்....
பிளீஸ்..பா... அப்பா பிளீஸ் பா...என அழுகும் குரல்....திரும்பி பார்த்தான்..
எழிலி தான்....அவள் அப்பாவிடம் கெஞ்சி கொண்டு இருந்தாள்...நான் படிக்கவே இல்லப்பா...ஃபைல் ஆகிடுவென்...அப்பா..நான் பரிட்சை எழுதல பிளீஸ் பா..என ஒரே அழுகை...அவளின் பக்கத்தில் இருந்த அவளின் தந்தையோ அதை சிறிதும் கவனிக்க வில்லை...
பக்கத்து பெண்கள் பள்ளியில் தான் படித்தால்...இரண்டும் ஒரே பள்ளி தான்..ஆனால் ஆண் பெண்ணுக்கு தனி கேம்பஸ்....பார்த்து கொள்ள கூட முடியாது....அரசு தேர்வு எப்போதும் ஆண்கள் பள்ளி மட்டுமே சென்டர்..எனவே மாணவிகளும் வந்து இருந்தனர்....அன்று தான் முதலில் பார்த்தான்...அழுது வடியும் முகத்துடன்...அன்றே மனதில் பதிந்த மனம்...😍😍
பரிட்சை ஹாலும் ஒரே ஹால்.....அவனுக்கு பின் சீட்....நகம் கடித்து மீண்டும் அழுது விடுபவள் போல் இருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது....தனக்கே ஒன்றும் தெரியாது...இருந்தும் எதோ எழுதியதை ஆசிரியர் அறியாமல் அவளிடம் காட்டினான்.....கண்களை விரித்து விட்டாள்..முகம் முழுக்க நன்றி பார்வை வேறு....இருவரும் எழுதி முடித்தனர்..அனைத்து பரிட்சைகளையும்....😍.
அதன் பின் விடுமுறையில் தான் அவளை அவ்வூரில் கண்டான்...அவள் தங்கையை போல் ஹாஸ்டலில் படித்தவள்...12ஆம் வகுப்பில் மிக உடம்பு முடியாமல் வீட்டில் இருந்து படிக்க சென்றாள்...
இருவரும் ஒரு புன்னகையுடன் கடந்து விடுவர்....
ஒரு வார்த்தை கூட பேசியதில்லை....இருவரும் தேர்வு முடிவுகளில் பாஸ் செய்து இருந்தனர்...பண்ணையார் மகனை பெரிய கல்லூரியில் படிக்க வைக்க முயல...அவனோ பக்கத்து ஊர் கல்லூரியில் b.com தான் படிப்பேன் என நின்று விட்டான்...அதே கல்லூரியில் தான் எழிலும் சேர்ந்தாள்...இருவருக்கும் இது தெரியாது...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..