கட்டுகடங்கா ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்தாள் ஆதினி....அத்தனை கோபமும் அமுதனின மேல்...அவன் ஒருவார்த்தை பேசி இருக்கலாம்??அப்பா ஊர் முன்னால் அவமான பட கூடாதாம்...சின்ன பிள்ளைங்க செத்தா பரவா இல்லையாம்??இத்தனை பயம் பயப்படுபவன் ஒரு பெண்ணை வேறு காதல் செஞ்சானாம்???ச்சீ..என மனதில் வறுத்தெடுத்து கொண்டே உள்ளே நுழைந்தவள்..கேட்ட பேச்சு சத்தத்தில் அப்படியே நின்று விட்டாள்.....
உள்ளே கத்தி கொண்டு இருந்தது அமுதன்.....
அம்மா...அவருகிட்ட சொல்லி ஊருகிட்ட பேச சொல்லு...இல்லேனா இன்னிக்கு மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்...செத்து போனது பிஞ்சு மண்ணுங்க....இப்பவும் நீதி ஊரு கட்டுப்பாடுனு உயிர எடுத்தா ..முதல்ல காட்டுக்குள்ள போறது நானா தான் இருப்பேன் .😠😠
என்ன உன் புள்ளைக்கி வாய் அதிகமா ஆகுது இப்பொலாம்...??இது பண்ணையார் மனைவியிடம் கேட்க...
அந்த அம்மையார்..மகனா கணவனா என முழித்து கொண்டு இருந்தார்....
ஆமாமா....ஊரு முன்னாடி பேசிட கூடாது..நம்ம அப்பாரு சொல்றத நாமளே கேக்களேனா ஊருக்குள்ள பயலுக மதிக்க மாட்டனுங்கனு அமைதியா இருந்தேன்ல??என்னை சொல்லணும்??அப்பவே பேசி இருக்கணும்....😠
இப்போ என்ன தான்டா செய்யணும்??
காட்டுக்குள்ள உங்களை போக சொல்லல?? போலீஸ்காரங்க போறதுக்கு வழிய விடுங்க...அம்புட்டு தான்..என்றவன் வெளியே வந்தான்...
வெளியே ஆதி நின்று இருந்தாள்...அவளை பார்த்து விட்டு சிறிய புன்னகையுடன் கடந்து சென்றான்...இத்தனை நேரம் அவனை அவள் மனதில் திட்டியே குமித்தாள் என தெரிந்தால்???😏😏
அவளோ போபவனையே விழி விரித்து நோக்கினாள்....இப்படியும் ஒருவனா??பெற்றவரை எப்படி அவமான படுத்துவது??எதிர்த்து பேசி மனமடிவு ஆக்குவது என மட்டுமே யோசிக்கும் இளைஞர் உள்ள உலகில்.. எங்கே அவர் பெயர் கெட்டு விடுமோ என ஊர் முன் பேசாமல்...இங்க வந்து தந்தை தவறையும் சுட்டி காட்டி செல்கிறான்....
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..