உறவு 7❤️

776 26 4
                                    

ஒரே நொடி...ஒரே நொடி தான் சுதாவை வீடியோ காலில் பார்த்தார் ஹரிஹரன்...பழைய ஞாபகங்கள் தலைதூக்க...உடனே போனை கட் செய்தார்.....அவர் கட் செய்த பின் தான் என்ன செய்தோம் என யோசித்தாள் ஆதி...

கண்களை மூடி அமர்ந்து விட்டார் ஹரி....என்னை விட்டுடுங்க🙏..எனக்கு என் பரசு வேண்டும்...🙏எனக்கு மூச்சு முட்டுது...என்னை விட்ருங்க🙏😔..இந்த வார்த்தைகள் சுதா கூறியது அவர் காதில் நேற்று கூறியது போல் ஒலித்து கொண்டு இருந்தது.....
எந்த கணவனும் கனவிலும் கேட்க கூடாத வார்த்தை... 2வருட மண வாழ்வுக்கு அர்த்தம் இல்லாமல் போன அந்த நாள்....😐😐..

இதயம் வெடிப்பது போல் ஆகி கால் போன போக்கில் திக்கு அறியாமல் நடந்து கொண்டு இருந்தவரை, செத்து விடலாமா என யோசித்தவரை எங்கோ கேட்ட குழந்தையின் அழுகுரல் நினைவுக்கு கொண்டு வந்தது...அந்த நாள் அந்த அழுகுரல் ஆதியின் அழுகுரலாகவே இருந்தது.....பெற்ற மகளின் பூ முகம் நினைவு வர.....வீட்டை நோக்கி ஓடினார்....அன்று கை குழந்தையாக அழுது கொண்டிருந்தாள் ஆதி....ஓடி சென்று தூக்கினார்.....அன்றிலிருந்து இன்றுவரை அவளை விடவில்லை😐...அவள் கை பிடித்து அவர் நடத்தின நாட்கள் முடிந்து இன்று மகள் அவரின் கையை பிடித்து நடத்துகிறால்😊

நினைவுகளின் சூழலில் சிக்கி இருந்தவரை இன்றும் அப்பா என்ற குரல் நினைவுக்கு கொண்டு வந்தது....ஆம்..அவரது ரிங் டோன்...அவளின் குரல் தான்...அப்பா phone எடுங்க....என மகள் அழைக்கும் குரல் தான் ரிங் டோன்....

எடுத்தார்....அவரின் உயிர் தான் அழைத்தது....அப்போது தான் அவளிடம் சொல்லாமலே வைத்தது உணர்ந்தார்....
கரகரத்து இருந்த குரலை சரி செய்தவர்...

ஹலோ. அப்பு குட்டி....

அப்பா sorry பா..கவனிக்காம அப்படி பண்ணிட்டேன்....

எதுக்குடா சாரி....அதெல்லாம் ஒன்னும் இல்ல ...

உன்னால மட்டும் தான் பா..இப்படி கோபமே படாம இருக்க முடியும்...எப்படித்தான் இப்படி இருக்கியோ??

அதற்கும் சிரித்தார்....அற்பித் என்ன பண்றான்??

அவனுக்கென்ன வந்ததுல இருந்து ரொம்ப பிசி..என்னை கவனிக்கவே மாட்டிங்குரான்....அவள் புலம்ப...

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now