அவன் தூக்கி செல்லும் பாதி வழியிலேயே சுய நினைவு அடைந்து விட்டாள் அம்ருதா...
விடு..விடு டா..என கத்தினாள்..அவள் அவனை அடித்ததெல்லாம் அவனுக்கு எதோ குழந்தை அடிப்பது போல் இருந்தது....விடாமல் அடிக்க அவன் சட்டையே செய்யாமல் கொண்டு வந்தான் வீட்டுக்கு....
கட்டிலில் அவளை போட்டு விட்டு அவள் மேல் படர துவங்க கையை நீட்டியவள் அங்கிருந்த கண்ணாடி விளக்கை எடுத்து அவன் மண்டையில் போட்டாள்...
ஆ...என தலையை பிடித்து கொண்டு அவன் சற்று விலக ...எழுந்து விட்டாள்...வெளியே ஓடி வர...வெளி கதவை தாழ் போட்டு இருந்தான்....
சாவியை தேட அது கிடைக்கவில்லை....அதற்குள் தலையை பிடித்து கொண்டே வெளியே வந்தான்..கண்களில் அத்தனை கோபம்....
அவள் சாவிக்காக பதறுவதை கண்டவன் இடியேன சிரித்தான்.....இங்க இருந்து உன்னால எங்கேயும் போகவே முடியாது.... ஹ..ஹ...ஹ.....
அந்த வீட்டில் ஒளிய கூட இடம் இல்லை..என்ன செய்வது என தெரியாமல் திகைத்தாள்...அவன் நெருங்க நெருங்க பக்கத்தில் இருக்கும் பாத்ரூமிற்குள் நுழைந்தாள்..நுழையும் முன் அவனது போனை எடுத்து கொண்டு நுழைந்து விட்டாள்...
ஏய்...கதவை திற... திறடி...என கத்த..
உள்ளே போய் அபிக்கு ஃபோன் போட்டாள்....
சந்தோஷ் சாரா??என போனை எடுத்தான்..
அபி..அபி..என கத்தினாள்..
அம்ருதா...என கத்தியவன்...எங்க இருக்க..
சந்தோஷ் ..சந்தோஷ் வீட்டில...அபி..பயமா இருக்கு..பயமா இருக்கு...என அழ துவங்கினாள்..வெளியே அவன் கதவை உடைத்து விடுவது போல தட்டினான்...
பயப்படாதே..நான் வரேன்...அழாதே..என ஃபோனில் அவளை ஆறுதல் படுத்தி கொண்டே ஓடினான் சந்தோஷ் வீட்டுக்கு...
வாசலில் வந்து அம்ருதா என கத்தினான்...
அபி சத்தம் கேட்டதும் கதவை திறந்து கொண்டு அவனிடம் ஓடினாள்....அதற்குள் அபி கதவை உடைத்தே விட்டான்....
CITEȘTI
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mister / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..