என்ன ஆச்சு என் பொண்ணுக்கு என ஓடி வந்தார் அம்ருதா அம்மா வாசுகி..
ஒன்னும் இல்லமா..இப்போ ஓகே தான்..என அபி தான் சமாதான படுத்தினான்....
அமர் யாரிடமும் பேசவில்லை...மொத்த அமைதியையும் குத்தகைக்கு எடுத்தவள் போல் அமர்ந்து இருந்தாள்...யார் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை...சொல்ல வில்லை என்பதை விட அது அவளுக்கு தெரியவில்லை.....எத்தனை முயன்றும் ஒன்றும் நினைவில் இல்லை ...
இப்படியே இவுங்க யோசிச்சா ஸ்ட்ரெஸ் அதிகமாகி்விடும்...என மருத்துவர் கடிந்து கொண்டபிறகே சந்தோஷ் வெளியேறினான்....அவன் பின்னே சென்ற அபி என்ன நினைத்தானோ திரும்ப வந்தான்....
எதையும் யோசிக்காத....ரெஸ்ட் எடு....வேலனை எப்படியும் காப்பாற்றலாம் என தைரியம் அளித்தவன் அவள் தலையை மெல்ல வருடி சென்றான்....தேனை சுற்றிய வண்டு போல எந்நேரமும் துறு துருவென இருக்கும் பெண்..அவனை கண்டாலே சூரியனை கண்ட மலர் போல் பிரகாசிப்பாள்.....எத்தனை அவமான படுத்தினாலும் வந்து நிற்பாள்..இன்று இப்படி இருப்பது அவனுக்கே சற்று வருத்தமாக இருந்தது ...
மற்ற நாளாய் இருந்தால் அவன் வந்து பேசியதற்கே கோவில் கட்டி இருப்பாள்...இன்று அவன் தலை வருடி சென்றதை கூட அவளால் உணர முடியவில்லை....தேங்கியிருந்த கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் வழிவேன் என்பது போல் இருந்தது.....
வாசுகி..மகள் அருகிலேயே இருந்தார்....அவள் தூங்க வேண்டும் என்பதற்காக ஊசி போட்டு சென்றனர்...மருந்து வீரியத்தில் மெல்ல கண் அயர்ந்தாள்....
மூடிய கண்களுக்குள் வேலன் தெரிந்தான்....அவனை கண்டவள் சந்தோஷத்தில் வேலா என அழைத்து கொண்டே அவனை நோக்கி ஓடினாள் ..
அவன்..மிஸ்..என்னை பிடிங்க பார்க்கலாம்..என விளையாட்டு காட்டினான்....இவளும் அவன் பின்னே ஓட....திடீரென அந்த இடம் புகை மண்டலமாக மாறியது....ஒரு ஓம குண்டத்தில் அக்கினி எரிய அதை சுற்றிலும் சிவப்பு உடை அணிந்த மூவர்...மூவரின் முகமும் தெரியவில்லை....அவர்கள் அருகே வேலன்...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..