உறவு 22❣️

629 23 8
                                    

Bomb blast நடந்த இடத்தை ஆராய்ந்து அங்கு இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து பார்த்து கொண்டு இருந்தான் அபிஜித்.....இருக்கும் அனைத்து கடவுள்களையும் வேண்ட...அவன் வேண்டுதல் பாதி மட்டும் கேட்க பட்டது போல...அவனின் கேத்தி படம் இறந்தோரின் லிஸ்டில் இல்லை..ஆனால் அன்பு மகளின் படம் ரினுவின் படம் இருந்தது ....கண்ணீர் வழிய அதை தடவினான் ...

பின் அங்கிருந்து விசாரித்து கேத்தி அனுமதிக்க பட்டு இருந்த மருத்துவமனை சென்றான்....

தன் அடையாள அட்டையை பயன்படுத்தி இரவு பகள் என்றெல்லாம் பாராது விசாரித்தான்...கடைசியில் கிடைத்த தகவல்...கேத்தி அங்கு தான் சிகிச்சை பெற்று இருந்து இருக்கிறாள்....

யார் மறைத்தனர்??ஏன்????என்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை...அவன் கையில் இருந்த திருமண சான்றிதழை எடுத்து ரெஜிஸ்டர் ஆபீஸ் செல்ல அது உணமைதான் அந்த திருமணம் அங்கு தான் நடந்ததாக கூறினர்...

அவன் திருமணம் காதல் திருமணம் அவர்களின் மதம் திருமணத்துக்கு தடை செய்து குடும்பமும் எதிர்த்ததால் வேறு வழியின்றி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்....கடைசி வரை கேத்தி குடும்பம் அவர்கள் காதலை ஏற்கவே இல்லை..கோவிலில் திருமணம் செய்தவன் அதை ரெஜிஸ்டர் செய்யாமல் போய் விட்டான்...அது அவனின் நேரமா??இல்லை தலை எழுத்தா???

சந்தோஷமான நிமிடங்கள் என்றால் அது அவனும் அவளும் இருந்த நொடிகள்....யோசித்து கொண்டே இருந்தவன் திடீரென அந்த பதிவாளரிடம் ஓடினான்...திருமணம் என்றால் சாட்சி கையெழுத்து...அதை போட்ட இருவரின் address வாங்கி அங்கு சென்றான்...

அவர்கள் கேத்தி தோழிகள்..இவனை கண்டு  திருதிருவென விழிக்க..
அவன் விடாமல் நின்றான்...

கேத்தி அம்மா அப்பா தான் அண்ணா..இனியாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று சொன்னார்கள்..அதோடு உங்களை பற்றி எந்த தகவலும் இல்லை..உங்களுக்கு ஃபோன் செய்தாள் உங்க அம்மா எடுத்து இனி ஃபோன் செய்ய வேண்டாம் எனசொல்லி உங்கள் நம்பரையும் மாற்றி விட்டனர்....இங்கு அந்த bomb blast இல் தப்பித்த கேத்தி தன் பத்து வருட நினைவுகள் அழிந்த நிலையில் இருந்தாள்...அவளுக்கு தன் அப்பா அம்மாவை தவிர யாரையும் தெரியவில்லை😐😐...

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Dove le storie prendono vita. Scoprilo ora