எதோ உந்துதலில் கயிறை எடுத்து கட்டி கொண்டாள்...ஆனால் இப்போது எதோ ஒரு பயம் மனதை ஆட்டுவித்தது...
தான் செய்தது தவறோ???மனம் ஒரு நிலையில் இல்லை...நேரம் ஆக ஆக பயம் வேறு..
கிளம்பிவிட்டாள்...அபி வீட்டுக்கு... அவனிடமே சொல்லிவிடுவோம் என...
அம்மா...என அழைக்க இந்திராணி தான் வந்தார்..
வாமா..😁
அபி சார் இருக்காரா??
அபி வர நேரம் தான் டா...உள்ளே வா...என அமர வைத்தவர் ..அன்னிக்கு அபி பேசுனது மனசுல வச்சுக்காத அம்ருமா...அவன் கோபத்துல....
பரவா இல்லமா...நான் அதை பெரிசா எடுக்கவே இல்ல...சரி இப்போ சொல்லுங்க அபி சார் wife என்ன ஆனாங்க???
அவருக்கு அவளை பிடித்து விட்டது....அந்த நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் வீட்டுக்கு வந்து இருக்கிறாள்...
மும்பைல நடந்த குண்டுவெடிப்பில் கேத்தி ரீனு ரெண்டு பேரும் இறந்துட்டாங்க...இரண்டு பேரோட body கூட முழுசா கிடைக்கல ..😬..அதுனால தான் அவன் இன்னும் தன் மனைவி மகள் இறக்கல அப்படினு சொல்றான்...அன்னிக்கு தேதியில் அந்த ஹோட்டலில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்...இதை அவன் நம்ப மறுக்கிறான்....
அவர் சொல்லி முடித்து விட்டார்..இப்போது பாரம் ஏறியது அவள் மனதில்...அப்படியானால் கேத்தி இறக்க வில்லையா??ஒரு வேளை உயிரோடு இருந்தால்????மீண்டும் அபி வாழ்வில் வந்து விடுவாளா???நினைவே கசந்தது....கையில் இருந்த கயிறை கண்டாள்..இதை அவனிடம் கூற வேண்டுமா???வேண்டாம்..பேசாமல் இதான் முடிவு என இறந்து விடுவோம்....அவன் சந்தோஷமாக இருக்கட்டும்.....
யோசிக்கும் போதே வந்து விட்டான் ..அவள் அமர்ந்து இருப்பதை கண்டு யோசித்தான்....என்ன விஷயம்???
அவன் முகம் நோக்கவே இல்லை...கையில் இருந்த கயிறை காட்டினாள்...
பள்ளியில் நடந்தவற்றை கூறினாள்...நீ என்ன பைத்தியமா ??இத எதுக்கு கைல கட்டுன???😠 கழட்டு முதல்ல....என அவன் கத்த...
STAI LEGGENDO
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mistero / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..