உறவு 24❣️

683 22 8
                                    

அன்று காவல் நிலையம் வந்து இருந்தான் சந்தோஷ்....வந்ததும்
அபியை முறைக்க...அபி ஒன்றும் பேசாமல் அவன் வேலையை பார்த்தான்...

சந்தோஷ் தலையில் கட்டுடன் அபியின் முன் வந்து நின்றான்....

உன்னை சும்மா விடுவேன்னு நினைக்காத???

நான் உன்னை சும்மா விட்டதால் தான் இப்போ என் முன்னாடி நிக்கிற??அன்னிக்கே போட்டு தள்ளி இருந்தா இப்படி பேசி இருக்க மாட்ட....
நீ பண்ற பொறுக்கிதனம் இன்னும் உன் பொண்டாட்டிக்கு தெரியாதுன்னு நினைக்குறேன்.....போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா???அவளுக்கே தெரியாத ஒரு உண்மையை வேறு மறைச்சு கல்யாணம் பண்ணி இருக்க...அவளுக்கு பழையது நினைவு வந்தா என்ன ஆகும் தெரியுமா???
அபி பேசி கொண்டே போக...

சந்தோஷ் முகம் வெளிறியது...ஏய்...என்ன??என்ன எதோ உலருற??
என அவன் நாக்கு தந்தியடிக்க....

வாயை மூடு.....என்னை பேச வைக்காத....என சொல்லி அபி வெளியே சென்றான்...

சந்தோஷுக்கு ஹாஸ்பிடலில் நடந்த அனைத்தும் நினைவு வந்தது....அவன் கண் விழித்ததும் கண்களில் கண்ணீருடன் அவன் முன் நின்று இருந்த அவன் மனைவி கேத்தி....
ஒவ்வொரு நாளும் அவனை அப்படி கவனித்தாள் ஆனால் அவள் முகத்தில் எப்போதும் யோசனை ரேகைகள்...

என்ன ஆச்சு கேத்தி....

ஒன்னும் இல்லை சந்தோ...

எப்பவும் எதோ யோசனையில் இருக்க...அப்போ எதோ இருக்கு...என்னனு சொல்லுமா??

எதோ சில ஞாபகம் மாதிரி வருது....நான் ஒரு குழந்தை....பாப்பாவை நான் ரிணு என கூப்பிடுறேன்...அது நம்ம பையன் இல்ல ....அவ என்னை அம்மானு சொல்றா??அப்புறம் முகங்கள் தெளிவாக இல்லை...ஆனால் இதெல்லாம் எனக்கு ஏற்கனவே நடந்தது போல இருக்கு...எனக்கு மறந்து போன அனைத்தும் நினைவு வருகிறதா??அப்படினா எனக்கு எப்படி குழந்தை எல்லாம் இருக்கும்??எனக்கு உங்க கூட கல்யாணம் ஆகி நம்ம பையன் மட்டும் தான???
அவள் கேள்வி மேல் கேள்வி கேட்டு தலையில் கை வைத்து அமர்ந்தாள்...அவள் இந்த யோசனையில் இருந்ததினால் மட்டுமே அவனை எதற்காக அந்த பெண் மண்டையில் அடித்தாள் என கேட்கவில்லை...கேட்டு இருந்தால் அதற்கும் எதாவது சொல்லி சமாளித்து இருக்க வேண்டும்??என்ன சொல்வான் ??அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்ள இருந்தேன் அடித்து விட்டாள் என்றா???

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now