இன்னிக்கு கதையில ஒரெடியா உணர்வுகளின் ஆதிக்கம் அதிகம்...உணர்ந்து read பண்ணுங்க...
🌼🌼🌼
அடுத்து அவள் அருகே செல்ல போக... அண்ணே..என ஒருவன் அழைக்க அடிக்க சென்றவன் திரும்பி பார்த்தான்...
யாரோ வர மாதிரி இருக்கு அண்ணே..வாங்க போகலாம்..இது இதுக்கு மெல்ல கண்டிப்பா உயிரோடே இருக்காது ...
அவனுக்கும் வண்டி சத்தம் கேட்கவே கிளம்பினான்....
நடு ரோட்டில் உயிரை மட்டும் விடாமல் வைராக்கியத்துடன் போராடி கொண்டு இருந்தாள் ஆதினி...
அங்கு வண்டியில் வந்த சிலர் அவளின் நிலை கண்டு வேகமாக அருகே வந்து உயிர் இருக்கிறதா என கண்டனர்...இதயம் துடிப்பது மெலிதாக கேட்க..உடனே அவளை எடுத்து வண்டியில் கிடத்தி மருத்துவமனை விரைந்தனர்....
ஐயோ இவர்களை எடுத்து சென்றால் போலீஸ் கேஸ் ஆகுமே நம்மையும் மாட்டி விடுவரே என தயங்கி உதவ மறுக்க அது ஒன்றும் சிட்டி(???) இல்லையே???
இதோடு நூறாவது முறையாக ஆதிக்கு ஃபோன் அடித்து ஓய்ந்து போனார் ஹரி....அவரின் கலங்கிய முகம் கண்ட அமுதன் அவர் அருகிலேயே இருந்தான் மனதில் சொல்லொண்ணா கவலையுடன்....ஒரு பொருள் அருகே இருக்கும் போது அதை விட இழந்த பொருளை அதிகம் நினைத்து இதை கவனிக்க மாட்டோம்...இப்போ இந்த பொருளும் போக போகிறது எனதெரியும் போது ரணத்தை மேலும் ரணமாக்குவது போல வலிக்கும்...அந்த வலிக்கு இணை இல்லை....
அந்த ஊரில் இருந்த அந்த ஒரே மருத்துவமனை திடீரென பர பரப்பாக என்ன என்று அமுதன் விசாரித்தான்...
எதோ ஒரு பொண்ணாம் பா..உயிருக்கு போராடிகிட்டு இருக்கு....பொம்பளை புள்ளைனு கூட பார்க்காம அடிச்சு போட்டு இருக்காங்க...இங்க டாக்டருங்க போலீஸ் கேஸ் பார்க்க முடியாதுனு சொல்றாங்க....
அமுதன் மெல்ல கூட்டத்தை விலக்கி முன்னேறினான்....இருக்கும் அத்தனை கடவுளையும் முதன் முறையாக வாயை திறந்து கூப்பிட்டு கொண்டே சென்றான்...அங்கு...
ŞİMDİ OKUDUĞUN
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Gizem / Gerilimஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..