உறவு 14❤️

649 25 8
                                    

அவனின் கேள்விக்கு அவள் பதில் சொல்ல வில்லை என்றாலும் அவள் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது...சுதா அம்மா உனக்கு என்ன வேண்டும் ஆதி???இதே கேள்வி.....

தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.....

ஆதி..என்றவாறே அர்பித் வந்தான்...

வெகு நாட்கள் ஆனது போல் இருந்தது நண்பனுடனான பேச்சு...அவனை பார்த்ததும் கண் கலங்கியது...

ஏய்..லூசு..என்ன ஆச்சு??என அவள் அருகே வந்து அமர்ந்தான்....

அர்பி..இங்க வந்தே இருக்க கூடாது டா...இப்போ என்னால தான அப்பா.....

அப்பாவுக்கு ஒன்னும் இல்ல...எதுக்கும் கலங்காத ஆதி இப்படி இடிஞ்சு போய் இருக்கலாமா???

அவன் மடி மீது தலை சாய்த்தாள்...ஹரி மடி தந்தை மடி என்றால் அவளுக்கு அர்பி மடி என்றும் தாய் மடி தான்...சிறுவயதில் இருந்தே....

அவள் தலை கோதியவன்..அவள் லேப்டாப்பில் பார்த்து கொண்டு இருந்த வேலையை தொடர்ந்தான்...அவள் கண்டு பிடித்ததை அரசாங்கத்துக்கு அனுப்பியவல்...அதை அவள் research செய்த நாடுகளுக்கும் அனுப்பினாள்...

சற்று நேரத்தில் அனைவரும் வீடியோ கான்ப்ரன்சில் வர....

பேச ஆரம்பித்தாள்....

இதான் இந்திய கிராமங்களின் தற்போதைய நிலை...ஆனால் இது போன்ற கிராமங்களில் உள்ள மக்களுக்கு இதை பற்றி தெரியவில்லை ...அதை எடுத்து சொல்ல ஆட்களும் இல்லை..இதை கண்டு பிடித்த என்னையும் இங்கிருந்து கிளம்ப சொல்லி விட்டனர்...

அவள் பேசி கொண்டு இருக்கும் போதே வாசலில் யாரோ நிற்பது போல் தெரிந்தது....சட்டென அர்பியை தட்டி மெல்ல எழுந்து சென்று பார்க்க கூறினாள்...

அவனும் மெல்ல எழுந்து செல்ல...உள்ளே பேச்சு சத்தம் சட்டென நின்றதும் வெளியே நின்ற அந்த உருவம் வேகமாக பின்வாசல் வழியாக வெளியே சென்றது... அர்பி கதவை திறக்கும் போது அங்கு யாரும் இல்லை...

திரும்பி அவளை நோக்கினான்....யாரும் இல்ல...

இல்ல..யாரோ இருந்தாங்க...கண்டிப்பா...

நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு Where stories live. Discover now