அத்தியாயம் - 1 💜

122 6 3
                                    

கதிரவன் தன் செந்நிறக் கதிர்களை ஒவ்வொன்றாய் எழுப்பி இசை மீட்டுக்கொண்டிருக்கும் அந்த காலை வேலையில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் சியோல் நகரில் (Captial of South Korea) அன்று அனைத்து வணிக வளாகத்திலும் சிறு கடைகளிலும் வீடுகளிலும் ஒலித்துக் கொண்டிருந்து என்னவோ KBC News-ன் சர்ச்சைக்குரிய அந்த செய்தி மட்டுமே "BTS உறுப்பினர் V (Taehyung) மற்றும் BLACKPINK இன் ஜென்னி டேட்டிங் செய்கிறார்களா?" என்கிற தலைப்பில் சில புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.
BTS இன் நிறுவனமான பிக்ஹிட் என்டர்டெயின்மென்ட் மற்றும் Blackpink இன் நிறுவனம் YG என்டர்டெயின்மென்ட் இன்னும் ஊகங்களுக்கு பதிலளிக்கவில்லை என்பது மேலும் ரசிகர்கள் மத்தியில் சர்சையைக் கிளப்பியது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதத்திற்குரிய தலைப்பாகவும் மாறியுள்ளது.

இதற்கிடையில் ஒரு கருப்பு நிற Hyundai-GV80 மகிழுந்து பிக்ஹிட் என்டர்டெயின்மென்ட் கட்டிடத்தின் வாசலில் வந்து நின்ற ஓரிரு வினாடிகளில் சற்றும் தாமதிக்காமல் அங்கு குழுமியிருந்த அனைத்து கேமராக்களும் அந்த மகிழுந்திலிருந்து இறங்கி பாதுகாவலர்கள் புடைசூழ கருப்பு நிற முகமூடி மற்றும் தொப்பி அணிந்து வந்து கொண்டிருந்த நபரின் மீது கேள்வி அம்புகளைத் தாருமாறாய் வீசின. ஆனால் இது எதுக்கும் பதிலளிக்காமல் மரியாதை அளிக்கும் வகையில் தன் தலையை மட்டும் சிறிது தாழ்த்தி அனைவரையும் வணங்கி விட்டு உள்ளே சென்றான் நம் கதையின் நாயகன்.

மெல்லிய தேகமும், அதற்கேற்ற உயரமும், அலை அலையாய் பறக்கும் சுருண்ட கேசமும், பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் கண்களும், அவன் இதழில் எப்பொழுதும் இருக்கும் மெல்லிய புன்னகையும் அன்று ஏனோ வாடி இருந்தது எப்பொழுதும் வசீகரிக்கும் கண்கள் ஏனோ எரிச்சலையும் வலியையும் சுமந்து ஒலியற்று இருந்து.

கட்டிடத்தின் உள்ளே வந்த அவனது கால்கள் நேராக தலைமை நிர்வாக அலுவலரின் (CEO) அறையை நோக்கி சென்றது ஒரு வினாடி யோசித்து விட்டு கதவைத் தட்டினான் "உள்ள வா டேயங் (Taehyung) உனக்காக தான் காத்துட்ருக்கோம்" என்று கேட்ட கணீர் குரலில் சற்று தயக்கத்துடன் உள்ளே சென்றான்.

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now