அத்தியாயம் - 32 💜

47 2 4
                                    


“வந்து சேர வச்சேன்..” என்ற அவன் வார்த்தையில் அவள் உலகமே ஒரு நிமிடம் அசையாமல் நின்றது.. புருவம் சுருக்கி யோசித்தவள் குனிந்து தன் மடியில் தலை சாய்த்து இருந்தவனை உற்று நோக்கிபடி அவன் கண்களில் உணர்ந்தது அவன் கூறியது பொய்யில்லை என்பது மட்டுமே “இல்ல.. எ.. எனக்கு புரியல.. என்ன சொல்ல வரீங்க..” என்று கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தவளின் கண்களும் உதடுகளும் பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது.. 

துடித்த இதழை தன் இதழ்களுக்கு அடக்க நினைத்த மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன் பார்வையை அவளிடம் இருந்து திருப்பி அங்கிருந்த நிலவை பார்த்து “இன்னைக்கு நிலா ரொம்ப அழகா இருக்குல்ல.. மேகா..” அவனின் மேகா என்ற அழைப்பிலேயே அவ்வளவு அழுத்தம்.. அத்தனை ரசனை.. இதற்கு முன்பும் அவன் இவ்வாறு அழைத்ததுண்டு ஆனால் இந்த முட்டாள் பெண்ணின் புத்தியில் இன்று தானே அது உரைத்தது.. இதயம் படபடவென துடிக்க நுரையீரலும் சதி செய்து சுவாசத்திற்கு தடை விதித்தது உதடுகளை மெல்ல விரித்து காற்றை உள்ளே இழுத்து சுவாசித்தவள் தலையை சிலுப்பி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு.. திரும்பி இருந்த அவன் முகத்தை தனது வலது கையால் அவன் இரு கண்ணங்களையும் ஒருசேரப் பற்றி தாடையோடு சேர்த்து தன்னை நோக்கி திருப்பியவள் “பேச்ச மாத்தாதீங்க உண்மைய சொல்லுங்க..” என்றவளின் அழுத்தத்தில் நீ சொல்லியே ஆக வேண்டும் என்கின்ற உறுதி.. 

அவளை நோக்கி திரும்பியவன் வேறு ஏதும் பேசாமல் அவள் விழிகளை ஆராய்ந்தபடியே இருக்க.. அவன் கண்களின் முன்பு கைகளை ஆட்டியவள் “முழிச்சுக்கிட்டே தூங்குறீங்களா என்ன.. மிஸ்டர் டேஹூயங்.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. இப்ப சொல்ல போறீங்களா இல்லையா” என்று கோபமாக கேட்டுவிட்டு சலித்துக் கொண்டே கன்னங்களை பற்றி இருந்த அவள் கைகளை உருவ அவள் கைகளை தன் கைகளுக்கு பொத்திக் கொண்டவன்.. “ஆமா..” என்றான் தன் கைகளுக்குள் இருந்த அவள் விரல்களை பார்த்துக் கொண்டே.. 

“ஆமானா.. என்ன அர்த்தம்” என்று அவள் தீவிரமாக கேட்க.. 

விரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவனின் விழிகளில் பட்டது என்னவோ அவளின் நிச்சயதார்த்த மோதிரம் தான் “இன்னும் ஏன் இந்த மோதிரத்தை போட்ருக்க..” என்றவனின் விழிகளில் அவ்வளவு கோபம்.. உடனே அந்த மோதிரத்தை அவள்  விரல்களில் இருந்து உருவ நினைத்தவனிடமிருந்து விரல்களை உருவி கொண்டவள் அவனைக் கேள்வியுடன் நோக்க அவனோ கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “அத கழட்டு மேகா..” பல்லை கடித்துக் கொண்டு  சொன்னவன் அந்த மோதிரத்தையே பார்த்தபடி இருக்க “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் தெளிவா பதில் சொல்லல” என்றவுடன் அடுத்த நொடியே “ஆமா நான் தான் உன்னை பிக் ஹிட் என்டர்டைன்மென்ட்ல ஜாயின் பண்ண வச்சேன்.. இப்ப என்ன அதுக்கு.. முதல்ல அந்த ரிங்க கழட்டு..”  

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now