அத்தியாயம் - 19 💜

55 3 1
                                    

அத்தியாயம் - 19 💜

 "இவர் கூப்பிட்டதும் நான் உடனே போயிடனுமா… இவர் பெரிய இவரு" என்று வாய் முணுமுணுத்தாலும் கால்கள் அவன் இழுப்புக்கு அவன் பின்னாடியே சென்றது… 

செல்லும் வழியில் அனைவரும் இவர்களை  வினோதமாக பார்க்க  அவன் பின்னாலேயே மந்திரித்த ஆட்டுக்குட்டி போல சென்றவள் சுதாரித்து அவனிடமிருந்து தன் கைகளை விடுவிக்க போராடினாள் "மிஸ்டர் டேயங்க் என் கைய கொஞ்சம் விடுங்க.. எல்லாரும் நம்மள தான் பாக்கறாங்க" என்று அவள் கூறிய வார்த்தைகள் எதுவும் அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை…  

கோபமாக தன் அறையை அடைந்தவன் உள்ளே வந்தவுடன் சட்டென அவள் கையை  விடுவித்து அவளை நோக்கி  திரும்பினான், அவன் இழுத்து வந்ததால்  வேகமாக வந்தவள் அவன் சட்டென கைகளை விடுவித்ததை உணராது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழ சென்றவள் விழுந்து விடுவோம் என்ற பயத்தில் தன் முன்னால் நின்றவனின் சட்டையை இறுகப்பற்றி கண்களை  மூடிக்கொள்ள அவளின் முகம் அவன் திண்ணிய மார்பில் மோதி நின்றது… 

"என்ன ஒன்னும் ஆகல.. அப்ப நம்ம  விழவில்லையா" ஒற்றைக்கண் திறந்து பார்த்தவள் அவளின் நிலையை உணர்ந்து நொந்து கொண்டவள் "சும்மாவே உன்னை கேவலமா நினைக்கிறான் இதுல எதுக்கு எடுத்தாலும் இவன் மேலேயே மோதி நினைக்கிறியே அறிவு கெட்டவளே இதுக்கு நீ கீழையே விழுந்திருக்கலாம்" என்று மனதில் தன்னை கடிந்து கொண்டு இறுகப்பற்றிய அவன் சட்டையிலிருந்து கைகளை  தளர்த்தியவள் அவசரமாக அவனிடமிருந்து விலகி பின்னே சரியப் போக உடனே டேயங் அவளின் இடைப்பற்றி தூக்கி கீழே விழாமல் பிடித்திருந்தான். 

மூச்சு முட்டும் தூரத்தில் அவனின் அருகாமையில் உணர்வின் பிடியில் சிக்கித் தவித்தவளை மேலும் அவனின் பலமான மூச்சுக்காற்று தேகத்தின் ஒவ்வொரு செல்லிலும் நடுக்கத்தை ஏற்படுத்தியது…  அதற்கு மேல் முடியாமல் மெதுவாக தலை நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள்…  இரத்த சிவப்பாய் இருந்த விழிகள் இரண்டும் பெண்ணவளின் கண்களைத் தான் ஊடுருவி பார்த்தது… அவளிடம் என்ன கூறியதோ தெரியவில்லை அவனின் விழி வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவனிடமிருந்து விடுபட முயன்றவளை காற்று புகாதவாறு  அவனின் கைகள் அவளின் இடையை இன்னும் அவனோடு சேர்த்து இருக்கியதில் அசைவற்று அப்படியே நின்றாள். 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now