அத்தியாயம் - 26 💜

39 2 3
                                    

அத்தியாயம் - 26 💜

எதிர்பாராமல் நிகழும் அறிமுகங்கள் தான் மாற்றங்கள் நிறைந்த வாழ்விற்கு மார்க்கமாய் அமைகிறது  இல்லையென்றால் இன்று பிறந்து நாளை மடியும் இந்த மனித வாழ்வில் ஏது சுவாரஸ்யம்… 

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டது… 

எப்படியும் வாரத்தில் இரண்டு மூன்று தடவை அவனைக் காண நேரிடும் ஒரு சிறிய புன்னகையோடு அவனை கடந்து விடுவாள்… அவனை தவிர்ப்பதற்கு ஆயிரம் வழிகள் இருந்தும் அவனை எதிர்கொள்ள பழகிக் கொண்டாள்… கண்டவுடன் மறைந்து கொள்வதோ, அச்சம் கொண்டு பயந்து நடுங்குவதோ இல்லை… அவனுடன் இணைந்து வேலை பார்க்கும் சந்தர்ப்பம் ஏதேனும் வந்தாலும் அதையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்…  

அதற்காக தன் இயல்பை மாற்றிக் கொண்டு அவனை யாரோவாக நினைக்கவில்லை இன்றளவும் அவன் பாடிய பாடல் அவள் செவிப்பறையை நிறைத்த பிறகே இரவு உறக்கம் அவளை ஆரத்தழுவும்… ரசிகையாக என்னவெல்லாம் செய்தாலோ அதில் எந்த மாற்றமும் இல்லை புதிதாக தோன்றிய உணர்வை மட்டும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாள்… 

மனதை கட்டுப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை, ஏனோ அவள் அன்று உணர்ந்த அவன் இதயத்தின் ஓசையை இயல்பாக கடந்து விட முடியவில்ல எத்தனையோ நாள் இரவின் தூக்கத்தை தொலைத்திருக்கிறாள்.

எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சில சமயங்களில் இதயம் தடுமாற தான் செய்கிறது… என்ன செய்ய உணர்வுகளுக்கு அர்த்தம் சொல்லி… உணர்ச்சிகளுக்கு உயிரளித்த அவள் மனதின் முதல் சலனமாயிற்றே ஆனாலும் அதையும் கடந்து போக கற்றுக் கொண்டு விட்டாள்… தனக்கு சொந்தமில்லாத பொருளையே தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை அவள்.. அவனோ உயிரும் உணர்வும் கலந்த மனிதனாயிற்றே ஏற்றுக்கொள்ளுமா மனம்? அன்று தடுமாறிய தன் மனதை கடிவாளமிட்டு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள், இனி அவளை மீறி அவள் மனது வேறு எதையும் நாடாது… 

இப்போதெல்லாம் அடிக்கடி இரவு நேரங்களில் பணிபுரிய நேர்கிறது.. வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்தாலும் அவர்களுக்கு புரியும்படி எடுத்துரைத்துவிட்டு மிகவும் முக்கியமான நேரங்களில் மட்டுமே இரவில் வேலை பார்கிறாள்.. ஓய்வெடுக்க நேரமின்றி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.. வேலை சுமை அதிகமாகிவிட்டது பொறுப்புகளும் கூடி விட்டது.. கதிரும் வேலைப்பளுவின் காரணமாக பாதி நாட்கள் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே பயிற்சி செய்கிறான்.. இந்த கொஞ்ச நாட்களில் அவளின் நட்பு வட்டாரமும் அதிகரித்து விட்டது..  கதிர் கோரியோகிராபர் என்பதால் J-hope உடன் பழக்கம் ஏற்பட்டு அது நட்பாக உருமாறியது கதிர் யுவதிக்காவையும் ஜேஹோப்பிற்கு அறிமுகம் செய்து வைத்து அவளையும் தங்கள் நட்பு வட்டத்துக்குள் சேர்த்து கொண்டனர்.. அதேபோல் போரா உடனான முரண்பாடு மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றதன் விளைவாக போராவின் மூலமாக யுவதிகாவிற்கு வேலைப்பளு மேலும் அதிகமானது. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now