அத்தியாயம் - 30 💜

57 1 3
                                    

குளிர்ந்த இளங்காலை வேளையில் மகிழுந்தின் திறந்த மேல்பகுதி வழியே தலையிலிருந்து மார்பு வரை வெளியே நீட்டி கைகளை பறவை போல் விரித்து கண்களை மூடியவளின் மனதில் இருந்த கவலை எல்லாம் எங்கோ பறந்து சென்றது போன்றதொரு உணர்வு.. 

 🎶பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
பறவை போல் ஆகினேன்…
போல் ஆகினேன் இன்று…
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…

உதடுகள் மெல்ல பாடலை முனுமுனுக்க மனதுக்கு அப்படி ஒரு நிம்மதி.. காற்றில் தலைமுடிகள் தாறுமாறாய் நடனமாட கலைந்திருந்த கேசமும் அவளுக்கு அழகாய் தான் இருந்தது.. மேகக் கூட்டங்கள் ஆங்காங்கே கூடி தனது மகிழ்ச்சியை மழையாக தூர இதமாக வீசிய காற்றில் மழைத்துளி ஆங்காங்கே அவள் முகத்திலும் இதழிலும் விழுந்தது,  திடீரென்று விழுந்த மழைத்துளியில் மெதுவாக கண்களை திறந்தவள் ஆழ மூச்சை உள்ளே இழுத்து சுத்த காற்றை நுரையீரலில் நிரப்பிக் கொண்டு மகிழுந்தின் அமர்விருக்கையில் அமர்ந்து திறந்திருந்த மேல் பாகத்தை மூடினாள்.. 

மகிழுந்தின் முன்புற கண்ணாடி வழியே சாலையைப் பார்த்துக் கொண்டே “எங்க போறோம்?” என்ற அவளின் கேள்விக்கு எதிர்ப்புறம் பதில் இல்லாமல் போக தனது சிரத்தை ஓட்டுனர் இருக்கையை நோக்கி திருப்பியவள் “உங்கள தான் கேட்கிறேன் மிஸ்டர் டேஹூயங்..” என்று கேட்டு அவன் பதிலுக்காக காத்திருக்க “முக்கியமான ஒரு வேலை விஷயமா போறோம்” என்று அவன் கூறிய மறுகணம் அவனை பார்த்து முறைத்தவள் “அதுக்கு ஏன் என்னை கூட்டிட்டு போறீங்க” என்று அவனை புருவம் சுருக்கி பார்க்க “ஏன் நீயும் அந்த ஆப்ஸ்லதானே வேலை பாக்குற.. அதனாலதான் உன்ன கூட்டிட்டு வந்தேன்” என்று அவன் நிதானமாக பதில் கூற நொந்து கொண்டவள் “ப்ளீஸ் மிஸ்டர் டேஹூயங்.. ஒரு வாரமா இப்படித்தான் அர்ஜெண்ட் வேலை அர்ஜெண்ட் வேலன்னு எங்கயாவது கூட்டிட்டு போயிடுறீங்க.. என்னோட வேலை எல்லாமே பெண்டிங்ல கிடக்கு..” ஒரு வாரமாக சரியாக வேலையை முடிக்காததால் சீனியர் போராவிடம் வாங்கிய திட்டுக்கள் அனைத்தும் செவியினில் கேட்டு மறைய அலுத்து கொண்டவள் “சரி என்ன வேலை?” என்றாள் அலுப்பாக. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Donde viven las historias. Descúbrelo ahora