அத்தியாயம் - 20 💜

43 2 2
                                    


அத்தியாயம் - 20 💜

"இது ஒன்னும் உங்க வீடு கிடையாது… ஆபீஸ்… உங்க இஷ்டத்துக்கு வர்றது போறது, எங்கேயாவது நின்னுகிட்டு சிரிச்சு வெட்டி கதை பேசறது, மியூசிக் கிளாஸ் போறேன்னு சொல்லி சீன் போட்றது.. நீ  உன்னோட லிமிட்ல இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் தேவை இல்லாத விஷயங்களில் எல்லாம் ரொம்ப தலையிடுற மாதிரி தெரியுது" என்று கோபம் தலைக்கு ஏற கண்கள் சிவந்து தலைகால் புரியாமல் 20க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து இருந்த அறையில் கத்திக் கொண்டிருக்கும் சீனியரின் எதிரே சற்று குழம்பிய முகபாவனையுடன்  ஒன்றும் புரியாமல் நின்ற யுவதிகா அவரின் பேச்சு மேலும் எல்லை மீறி போக பொறுமை இழந்து அவரின் பேச்சை கேட்க முடியாமல் அவரின் முன்பு தனது கைகளை நீட்டி நிறுத்தும் விதமாக சைகை காட்டினாள். 

"இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி பேசிட்டு இருக்கீங்க மிஸ் போரா" அதிர்ச்சி கலந்த கோபத்தை விழிகளில் காட்டி முழு தீவிரத்துடன் தனது எதிரில் இருந்த சீனியரை கேள்விகளால் நோக்கினாள் யுவதிகா. 

"நீங்க என்ன பண்ணல தேவையில்லாத எல்லாம் தான் பண்றீங்க… உங்ககிட்ட பைல் எடுத்துட்டு வர சொல்லி பத்து நிமிஷத்துக்கு மேல ஆயிடுச்சு இவ்ளோ நேரம் எங்க நின்னு கதை பேசிட்டு வரீங்க.. அர்ஜென்ட்டுன்னு ஒரு வேலை சொன்னா அதை இவ்ளோ நேரம் கழிச்சு கொண்டு வந்தா என்ன அர்த்தம் ஒரு பைல் எடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? லேட்டா வந்ததும் இல்லாம என்கிட்ட கேட்காம டைரக்டா மீட்டிங் ஹால்ல நுழைகிறீங்க.. மீட்டிங் ஹால் குள்ள போற பர்மிஷன் உங்களுக்கு யார் கொடுத்தா? அதுவும் இந்த மாதிரி ஒரு காஸ்ட்யூமோட.. இந்த மாதிரி ஒரு ஃபீல்டுல இருந்துகிட்டு கொஞ்சம் கூட மாடனா இல்லாம இப்படி பட்டிக்காடு மாதிரி வந்து நிக்கிறீங்க.. கொஞ்சமாவது உங்களுக்கு சென்ஸ் இருக்கா இல்லையா.." மூச்சு விட கூட இடைவெளி விடாது பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த சீனியரை "போதும்" என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கியிருந்தாள் யுவதி.

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now