அத்தியாயம் - 2 💜

64 2 0
                                    

"ஏய் எரும வந்து பத்து நிமிஷம் ஆச்சு இன்னும் ஆர்டர் பண்ணாம என்ன யோசிச்சிட்டு இருக்க என்ன வேணுமோ அத ஆர்டர் பண்ணி சாப்பிட்டு" என்று யுவதியை பார்த்து கூறினான் கதிர்.

"ம்ஹம்.... இங்க என்ன இட்லியும் கெட்டி சட்னியுமா கிடைக்கப்போது அந்த சான்வெஜ்யயும் நூடுல்ஸ்ய்யும் ஆர்டர் பண்ணு... அப்புறம் கதிர் அப்படியே ஒரு மில்க் ஷேக்கும் ஒரு ஐஸ்கிரீமும் ஆர்டர் பண்றா" என்று சொல்லிக்கொண்டே கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

"ஏன் மேடம் நீங்க ஆர்டர் பண்ண மாட்டீங்களோ... நாங்க என்ன உங்களுக்கு அசிஸ்டன்ட் வேலையா பாத்துட்டு இருக்கோம்... அதிலும் காலங்காத்தால ஐஸ்கிரீம் வேற... மொத ஃபோன நோண்டறது நிறுத்து சாப்பிடும் போது எதுக்கு ஃபோன் கீழவை அத" என்று கூறிக் கொண்டே சினம் கண்ட பார்வையுடன் அவளை நோக்கினான்.

ஃபோன கண்டா லட்சு (அம்மா லக்ஷ்மி) தான் கோவப்படுதுன்னு பார்த்தா இவன் எரிமலை கொப்பளிக்கிறானே என்று மனதில் நினைத்துக் கொண்டு
"காலைலே ஒரு ஸ்வீட்டோட ஆரம்பிச்சா இன்னைக்கு நாளும் ஸ்வீட்டா இருக்கும்டா" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வெயிட்டர் வந்து நின்றார் அவளை முறைத்துக் கொண்டே கதிர் ஆர்டர் செய்தான், சிறிது நேரத்தில் அவை அனைத்தும் வந்தன.

யுவதி ஐஸ்கிரீமை மட்டும் எடுத்துக்கொண்டு சான் வெஜ்ஜையும் நூடுல்ஸ் செய்யும் கதிரிடம் வைத்தாள், "என்ன பசிக்குதுன்னு சொல்லிக் கூப்பிட்டு வந்துடு எல்லாத்தையும் என்கிட்ட தள்ளுற" என்றான் கதிர்.

"நான் சாப்பிட்டேன் நீ சாப்பிடு" என்று கூறிக்கொண்டே கதிரை கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை பிரிக்கப் போனால். "ஏய் லூசு பசிச்சா எனக்கு சாப்பிட தெரியாதா... நான் சாப்பிட மாட்டேனா", " ஆமா நீ சாப்பிடமாட்ட... நேத்து நைட்ல இருந்து எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட நான் இல்லைன்னா காலையும் ஏதும் சாப்பிட்டு இருக்க மாட்ட... திரும்பி எந்திரிச்சு ப்ராக்டிஸ்னு ஓடிடுவ, ஹார்ட் வொர்க் பண்ணலாம் கதிர் உடம்ப இப்படி வருத்திகிட்டு பண்ணனுமா? சரி சரி இப்ப ஆ காட்டு" என்று ஐஸ்கிரீமில் இருந்து ஒரு ஸ்பூனை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Où les histoires vivent. Découvrez maintenant