அத்தியாயம் - 37 💜

75 4 15
                                    

“லைட்.. கேமரா.. ஆக்சன்..”

படப்பிடிப்பு தளத்தில் 30 பேர் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, BTS உறுப்பினர்கள் ஏழு பேருடன் தொகுப்பாளர் ஒருவர் அமர்ந்து பேசுவதும், சிரிப்பதும், கேள்வி கேட்பதும் என்பது போன்ற நேர்காணலுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது… 

“அட பக்கி பயலுகளா.. இந்த அர்த்த ராத்திலையாடா ஷூட்டிங் வைப்பீங்க.. அந்த விளங்காத நாலு கேள்வியை கேக்குறதுக்கு விடிய விடிய சூட்டிங் எடுப்பாங்க போல இருக்கே.. நமக்கு வேற எப்ப குடசாயும்னு தெரியலையே” என்று மனதில் கருகிக் கொண்டு கேமராமேன் பக்கத்தில் ஒரு கதிரையில் தூங்கி விழுந்தபடி கண்கள் சொருக அமர்ந்திருந்தாள்.. 

“இந்த சேரையாவது கொஞ்சம் மெத்து மெத்துன்னு போட்டு வச்சிருக்கலாம்.. லூசு பயலுக நம்மளுக்கு மட்டும் இரும்புச் சேரை குடுத்துருக்காங்க…” என்று புலம்பிய படியே அங்கு நடப்பவைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.. ‘உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கா.. யாரையாவது டேட் பண்றீங்களா.. உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின்ஸ் பெயர் சொல்லுங்க.. அடுத்து நீங்க யார் கூட கொளாப்பிரேசன் பண்ண போறீங்க..’ என்பன போன்ற கேள்விகளை தொடுத்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரை சத்தம் வெளியே வராத அளவிற்கு முணுமுணுப்பாக “இந்த மாதிரி பைத்தியக்காரன வச்சிக்கிட்டு என்ன பண்ண.. கேக்குறான் பாரு கேள்வி.. ஒரு கேள்வியாவது உருப்படியா கேக்குறானா.. இதுக்கு என்கிட்ட கேட்டிருந்தா நான் கூட நாலு நல்ல கேள்வியா எழுதிக் கொடுத்துருப்பேன்..” என்று புலம்பியபடியே கண்கள் சொருக படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட மின் விளக்கில் தலை சாய்த்து இமைகளை மூடினாள்.. 

நாற்காலியில் அமர்ந்தபடி கால்களை குறுக்கி உதடுகள் மெதுவாக பிளந்து மேல் அன்னத்தின் முன்னிரு பற்கள் வெளியே தெரியும்படி தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தவளின் கைகளில் வைத்திருந்த காகிதங்கள் ஒன்றொன்றாக அவள் கைகளில் இருந்து நழுவி ஆங்காங்கே பறந்த படி இருக்க அதைப் பார்த்து புன்முறுவலுடன் எதிரே வந்து நின்றவன் மெதுவாக குனிந்து அதை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தான்.. திடீரென்று தன்னை சுற்றி கேட்ட சலசலப்பு சத்தத்தில் மெதுவாக கண்களை திறந்தவள் எதிரே இருந்தவனை பார்த்துவிட்டு “ஹேய்.. ஹண்ட்ஸம்.. இங்க என்ன பண்றீங்க சூட்டிங் முடிஞ்சதா என்ன?” என்று  கண்களை கசக்கியபடியே ஆச்சரியத்தில் தொடங்கி கேள்வியாக முடித்தவள் சுற்றி பார்வையை செலுத்தியவாறு அவனை நோக்க, பறந்து சிதறி கிடந்த அனைத்து காகிதங்களையும் ஒன்று சேர்த்து எடுத்தவன் சிரித்த வண்ணமே அவளிடம் வந்து நின்று ஒன்று திரட்டிய காகிதங்களை அவள் முன்பு நீட்டி “ஸ்கிப்ட் பேப்பர்லாம் கையில இருந்து பறந்து போற அளவுக்கு டயர்டா இருக்கியா ஸ்லீப்பிங் பியூட்டி.. ரொம்ப சோர்வா இருந்தா சொல்லு நான் வேணா மேனேஜர் கிட்ட பேசுறேன் நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா” என்று கூறியபடியே தூக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலைந்திருந்த அவள் கூந்தலை பாதூரமாக வருடி சரிசெய்தபடி வினவினார் பி டி எஸ் ஜின்.. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Donde viven las historias. Descúbrelo ahora