அத்தியாயம் - 5 💜

36 1 0
                                    


எழில் பொங்கும் அந்த இளமாலை வேலையில் கண்ணாடி கதவுகளும் கண்ணை பறிக்கும் மின்விளக்குகளும் சூழ BeatBusters Dance Studio மின்னிக் கொண்டிருந்தது அதில் தலை முதல் கால் வரை வியர்வை சொட்ட உயிருள்ள ரப்பர் பந்தைப் போல் வளைந்து நெளிந்து பயிற்சி செய்து கொண்டிருந்தான் கதிரவன். தன் மூன்று வருட கடின உழைப்பால் இங்கு முதல் நிலை நடன பயிற்சியாளனாக உள்ளான். BeatBusters சியோலில் பிரபலமான நடனப் பயிற்சி மையம் K-pop இசையில் கொண்ட பற்றினால் நிறைய பேர் இங்கு சேர ஆர்வம் காட்டுகின்றன. 

தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களும் தன் தந்தையின் கடின உழைப்பால் உருவான கதிரவன் டெக்ஸ்டைல்ஸ்ம் இருந்தும் அதில்  எந்த ஆர்வமும் இல்லாமல் தான் நடனத்தின் மீது கொண்ட பற்றினாலும் காதலினாலும் தாய் நாட்டை விட்டு இங்கு வந்து தனக்கு பிடித்த வேலையை செய்கிறான். தந்தை குணசேகரனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்றாலும் தன் மகனின் விருப்பத்திற்கிணங்க அவன் கனவு பாதையை நோக்கி பயணிக்க சம்மதித்தார். கதிரின் தாய் அவன் எட்டு வயது இருக்கும் பொழுதே ஒரு விபத்தில் தவறிவிட்டார் உடன்பிறந்த சகோதரிகளோ, யுவதியை தவிர வேறு தோழிகளோ இல்லை. 

இரவு ஏழு மணி யுவதி கதிரை கைபேசியில் அழைத்து " ஹலோ கதிர் எங்க இருக்க? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது இன்னைக்கு நான் சீக்கிரம் வந்துருவேன் சேர்ந்து போலாம்னு சொன்னதுனால தான் நான் வெயிட் பண்ணேன் இல்லன்னா நான் பாட்டுக்கு வீட்டுக்கு போய் இருப்பேன் ஏன்டா என் உயிர் வாங்குற எங்கடா இருக்க இப்ப? உன்ன மாதிரி என்ன வெட்டி ஆபிசர்னு நினைச்சியா எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா" என்று கூறி பொறுமி தள்ள " ஓஹோ அப்படி என்ன மேடம் வெட்டி முறிக்கிற வேல இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்" என்று கேட்டுக்கொண்டே கதிர் அவள் முன்பு வந்து நின்றான். 

"இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு RUN BTS எபிசோடு போய் பாக்கணும்" என்று மிகவும் அவசர வேலை இருப்பதாக கூறிக்கொண்டே கதிரை பார்க்க  அவன் மீசை தாடி அனைத்தையும் சேவ் பண்ணி விசித்திரமாக அவள் கண்களுக்கு தெரிந்ததால் "ஹா.. ஹா..ஹா..ஹா.." இன்று உறக்க சிரித்துக் கொண்டிருந்தாள். 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Donde viven las historias. Descúbrelo ahora