அத்தியாயம் - 3 💜

47 2 0
                                    

CEO-விடம் பேசிவிட்டு RM மும் Taehyungம் மற்ற BTS உறுப்பினர்கள் இருக்கும் டான்ஸ் பிராக்டிஸ் அறைக்கு வந்தனர். அவ்விருவரும் அறையை நெருங்கிய அந்த நொடி ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்கள் தங்கள் பதற்றத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சோகத்தின் மறு உருவமாக வந்து கொண்டிருக்கும் Taehyung-ஐ ஆரத்தழுவி சமாதானம் செய்தனர். தங்கள் குழு ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை ஒன்றாக இருக்கும் தனது நண்பர்களை சகோதரர்களாகவும் தனது குடும்பமாகவும் ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கிய நாள் முதலாய் எழுவரும் அனைத்து பிரச்சனைகளையும் ஒன்றாகவே போராடி சமாளித்து வருகின்றனர். எப்படிப்பட்ட இக்கட்டான எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத தன் சகோதரர்களுக்காகவே அவன் மனம் இவ்வளவு பாடுபடுகிறது தன்னுடைய எதிர்காலம் மட்டுமல்லது அவர்களுடைய எதிர்காலமும் வீணாவதை அவன் விரும்பவில்லை.

"Taehyung" என்ற Jimin-னின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன் அடுத்த நொடியே தலையை கீழே தாழ்த்திக் கொண்டான்.  ஒரு நொடியானாலும் தன் நண்பனின் கண்களில் இருக்கும்  சோகத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் வந்துவிடும் போல இருக்கும் கண்ணீரையும் உணர்ந்தவன் அவனை ஆரத்தழுவி தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு ஆறுதலாக அவன் தலையை வருடினான்.

"பொறுமையா இரு ஒன்னும் இல்ல எல்லாம் சரியாயிடும்,  இதலாம் நம்ம வாழ்க்கையில சகஜம்தானே இது எதையும் மூளைக்கும் இதயத்துக்கும் எடுத்துட்டு போக கூடாது, நீ இவ்ளோ மன அழுத்தத்துக்கு உள்ளாகுற அளவுக்கு அப்படி ஒன்னும் நடக்கல எல்லாம் சரியாயிடும் கம்பெனி எல்லாத்த...

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.


"பொறுமையா இரு ஒன்னும் இல்ல எல்லாம் சரியாயிடும்,  இதலாம் நம்ம வாழ்க்கையில சகஜம்தானே இது எதையும் மூளைக்கும் இதயத்துக்கும் எடுத்துட்டு போக கூடாது, நீ இவ்ளோ மன அழுத்தத்துக்கு உள்ளாகுற அளவுக்கு அப்படி ஒன்னும் நடக்கல எல்லாம் சரியாயிடும் கம்பெனி எல்லாத்தையும் பாத்துப்பாங்க நீ ரிலாக்ஸா இரு" என்றான் Jimin.

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Où les histoires vivent. Découvrez maintenant