அத்தியாயம் - 17 💜

40 3 2
                                    

அத்தியாயம் - 17 💜

நாற்காலியில் அமர்ந்து தலை கவிழ்ந்து கண்களை மூடி இரண்டு புருவங்களையும் அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தவளின் எதிரே இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வந்து அமர்ந்தான் கதிர் "இந்தா இதை குடி தலைவலி போயிரும்" என்று கூறியவனின் கூற்றில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்  அவன் கொண்டு வந்த தேநீரை எடுத்து ஒரு மிடறு விழுங்கிவிட்டு "அதெல்லாம் சரியாகாது…  இப்ப எனக்கு தூங்கணும் தூங்குனா அதுவாவே சரியாயிடும்" என்று கண்களை மூடி தேநீரை  ருசித்தவாரே கூறினாள்.. அவள் கூறியதில் தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவன் அவளை நோக்கி "மணி காலைல 6 இப்போ உனக்கு தூக்கம் வருதா" என்றான். 

கண்களை மூடி தேநீரை ருசித்துக் கொண்டிருந்தவள் உடனே கண்களை திறந்து "அதைத்தான் நானும் சொல்றேன் காலைல ஆறு மணி அதுவும் இன்னைக்கு என்ன கிழமை ஞாயிற்றுக்கிழமை… இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமாடா நான் சாதாரண நாளிலேயே எட்டு மணிக்கு முன்னாடி எந்திரிக்க மாட்டேன் ஞாயிற்றுக்கிழமை 6:00 மணிக்கு என்னை ஆபீஸ் வர வச்சிருக்கீங்க இவங்களுக்கு எல்லாம் நரகத்தில கூட இடம் கிடைக்காது" என்று  ஆக்ரோஷத்தில் ஆரம்பித்து அழும்நிலையில் கூறியவள் கையில் இருந்த தேனீர் குவலையை கீழே வைத்து விட்டு அந்த மேசையிலேயே தலையை கவிழ்த்தி சிணுங்கி கொண்டிருந்தாள். 

அவள் செய்கையில் சிரித்தவன் "எப்படி யோசிச்சாலும் நீ சரியான நேரத்துக்கு ஆபீஸ்க்கு வந்ததை தான் என்னால ஏத்துக்கவே முடியல.. ஏதோ தில்லாலங்கடி வேலை பார்த்துருக்க.." என்று அவளை சந்தேகமாக நோக்கியவன்  அவள் திருட்டு முழி முழிப்பதை பார்த்து திடீரென்று யோசனை வந்தவனாக "ஏய் இன்னைக்கு குளிச்சியா நீ?" என்றான்,  அதற்கு அவள் அசால்டாக இரண்டு தோள்களையும் குலுக்கிக் கொண்டு "சண்டே னா எல்லாத்துக்கும் லீவு தானே. ..  லீவ்  அன்றைக்கு ஆபீஸ் வச்சது அவங்க குத்தம் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது… நான் இன்னைக்கு பல்லு விளக்குனதே பெருசு… போவியா… கடுப்புல எதாவது சொல்லிவிட போறேன்" என்றாள். 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now