அத்தியாயம் - 29 💜

51 2 4
                                    

மாலை நேரத்தில் அஸ்தமனமாக இருக்கும் சூரியனை கரு நிற மேகங்கள் சூழ்ந்து இடி மின்னல் இல்லாமல் ஒன்றிரண்டு மழைத்துளிகள் கீழே விழ தொடங்கிய நேரம்.. 

ஜன்னலின் அருகே நின்றவள் விழுந்த மழைத்துளிகளையே இழக்கின்றி நோக்கிக் கொண்டிருந்தாள்.. இடைவிடாது பூமியை குளிர்வித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளில் ஒன்றிரண்டு அவளின் முகத்திலும் உடம்பிலும் பட்டு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.. இருந்தும் அந்த அழகான மழையையோ, அமைதியையோ, இதமான குளிரையோ ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை..

அவளின் தனிமையை கலைக்கும் விதமாக அறையின் கதவு மெதுவாக திறக்கப்படும் சத்தம் கேட்டது.. அது அவள் காதில் விழுந்ததோ இல்லையோ.. அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. யாரென்று திரும்பி பார்க்கும் எண்ணம் கூட இல்லை.. காலடி சத்தம் அவளுக்கு மிக அருகில் கேட்டது.. திடீரென அந்த அறையில் நிரம்பி இருந்த காற்றின் வாசமும் அவள்  உள்ளுணர்வும் அது அவன் தான் என்று அவளுக்கு உணர்த்த விழிகளில் நீர் கோர்த்தது..

நடந்து அருகே வந்தவன் அவளுக்கு பின்னால் இரண்டடி தூரத்தில் தான் நிற்கிறான் இருந்தும் அவளிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. அவளுக்குத்தான் அந்த இதமான குளிர்ந்த சூழலிலும் கூட சுவாசிக்க காற்றில்லாமல் மூச்சு முட்ட தொடங்கியது.. மூச்சை நன்றாக இழுத்து ஆழ்ந்து சுவாசித்தவள், கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு மெதுவாக திரும்ப, கண்டது என்னவோ ஆடை மிதமாக மழையில் நனைந்திருக்க கேசத்திலிருந்து ஆங்காங்கே ஈரம் சொட்ட நின்று கொண்டிருந்தவனை தான்..

அனிச்சை செயலாக அங்கு அருகில் இருந்த ஒரு பூந்துவாலை எடுத்து அவனை பார்காமலேயே அவனிடம் நீட்டினாள் அவள்.. வெகு நேரம் அவன் அதை பெற்றுக் கொள்ளாமல் இருக்க யோசனையுடன் அவள் நிமிர்ந்து பார்த்த அதே நேரம் அவனும் ஓரடி முன்னால் வந்து அவள் கையில் இருந்த துண்டை பற்ற இருவரின் விழிகளும் ஒன்றாக கலந்தது.. 

மிதமாக பெய்த மழை இப்போது வேகம் எடுக்க அதை உணரும் நிலையில் அவர்கள் இல்லை.. சுற்றி இருந்த எதுவும் இருவர் கண்ணிலும் படவில்லை.. அவன் சிகையிலிருந்து சொட்டிய துளி நீர் ஒன்று அவளின் விழிகளில் பட்டுத் தெறிக்க நிகழ்வுக்கு வந்தவள் முதலில் உணர்ந்தது, அவள் இதற்கு முன்பு உணர்ந்த அதே இசையை தான்.. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Onde histórias criam vida. Descubra agora