அத்தியாயம் - 28 💜

37 3 4
                                    


இரவில் நிலவை ரசித்து பழகிய மென்மையானவனுக்கு இன்று கரிய இரவில் கைபேசியின் வெளிச்சத்தில் சிதைந்த நிலவாய் அவளை பார்த்தவுடன்.. அவன் உயிர் உணரும் வழி என்ன? அவனால் தானோ? அவளை தனியே விட்டு சென்றது அவன் தானே.. குற்ற உணர்ச்சி நெஞ்சை குடைய அசைய மறுத்தன அவனின் கால்கள்.. 

ஒரு வினாடிதான்.. கண் சிமிட்டும் நேரத்திற்குள் அவன் மார்பை முட்டி மோதியது அவள் சிரம்.. அவனைப் பார்த்த அடுத்த நொடி ஒரு நிமிடம் கூட வீனடிக்கவில்லை தாய் பசுவைக் தேடும் கன்றாய் வேகமாக ஓடிச் சென்று அவனிடையோடு  கட்டியணைத்து கொண்டாள்.. அவள் திடீர் அணைப்பில் இரண்டு அடி பின்னால் சென்றவன் உணர்ந்தது என்னவோ அவள் உடல் மொழியை தான்.. அவள் காட்டிய இறுக்கமே கூறியது அவளின் பயத்தையும் பதற்றத்தையும்.. வேகமூச்சுகளால் ஏறி இறங்கிய மார்புக்குள் நிற்காமல்  வெடித்து விடும் அளவிற்கு அடித்துக் கொண்டிருந்தது அவள் இருதயம்.. அவள் உடல்முழுவதும் அப்படி ஒரு நடுக்கம்.. 

அதிர்ச்சியா, இயலாமையா தெரியவில்லை டேஹூயங்-கின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை அவளை கட்டி அணைக்கவும் இல்லை விட்டு விலகவும் இல்லை உறைந்த சிலையென கண்கலங்கி நின்றிருந்தான்.. 

சிறிது நேரத்தில் அவனிடமிருந்து மெதுவாக விலகியவள் நிமிர்ந்து அவன் விழிகளை பார்க்க அவன் விழிகளும் அவளைத்தான் இயலாமையுடன் பார்த்தது.. ஒரு பெரிய கேவலுடன் தன் இரு கரங்களால் அவன் மார்பிலேயே மாறி மாறி அடித்தவள் “எ.. எல்லாம் உ.. உன்னால தான்.. எல்லாம் உன்னால தான்..” அவள் விழிகளில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வடிய அது யாரோ ஒரு முரடனின் ஐவிரல் பதிந்து சிவந்து வீங்கியிருந்த அவள் கன்னங்களை கடந்து, சிதைந்து ரத்தம் உறைந்து நின்ற அவளின் கிழிந்த இதழ்களின் வரிகளில் வழிந்து கீழே சென்றது.. அவ்வளவுதான் அதற்கு மேல் அவனாளும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவளின் கசங்கிய தோற்றத்தை.. விழிகளை இறுக்கமூடி அவன் பட்ட வேதனையில் சூடான ரத்தம் கண்ணீராய் வழிந்தது அவன் கண்களிலிருந்து.. 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Dove le storie prendono vita. Scoprilo ora