அத்தியாயம் - 38 💜

90 4 2
                                    

🎶வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே… 
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே 
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே… 
ராசாளி… பந்தயமா…

தனது இடது கையையும் பாதி தலையையும் சாய்த்து வெளியே நீட்டியபடி தன்னை தொட்டுத் தழுவிச் செல்லும்  காற்றை கண்மூடி ரசித்தவாறு முகம் முழுக்க மகிழ்ச்சி புன்னகையோடு அவள்.. அவளை கண் இமைக்காமல் ரசித்தவாறு ஓட்டுநர் இருக்கையில் அவன்.. 

எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவான முகத்தோடு அவள்.. 
அவள் செய்கையில் முகத்தில்  குழப்ப ரேகையோடு அவன்.. 

என்றும் இல்லாத அதிசயமாய் தன்னுடன் இருக்கும் போது இன்று அப்படி ஒரு மகிழ்ச்சி அவள் முகத்தில்.. அதை  உணர்ந்தவன் அனைத்து குழப்பங்களையும் ஓரம் வைத்து விட்டு அவளுடனான ஏகாந்த பொழுதுகளை ரசிக்க ஆயத்தமாகி விட்டான்.. 

நிலவினை தொடும் அளவிற்கு நீண்ட தூர பயணம் செல்லவும் அவன் தயார் தான் அவள் உடன் இருந்தால்…  கூடவே இரு என்பதை தவிர கூடுதலாக வேறு எந்த ஆசையும் அவனிடமில்லை.. 

பயணம் தொடங்கி நெடுந்தூரம் சென்ற பின்பும் வார்த்தைகளில்லை பார்வை பாஷைகள் மட்டுமே இருவருக்குள்ளும்..  நீண்ட நேர மௌனத்தை கலைக்கும் விதமாக அவளிடம் இருந்து வந்த கேள்வி

“ஏன் நான்?” கேட்ட பின்பும் அவள் கண்கள் மூடி தான் இருந்தது.. 

இதற்கு ஓராயிரம் முறை பதில் சொன்னாலும் அதே கேள்வியில் வந்து நிற்பவளை பார்க்கும்போது அவனுக்கு சலிப்பு தட்டவில்லை சிரிப்புதான் வந்தது, இருந்தும் அவளை குழப்பத்தில் இருந்து மீட்டு தெளியவைப்பது அவன் கடமை என்பதை உணர்ந்தவன் “நீ ன்றத தாண்டி வேறு என்ன காரணம் வேணும் உன்ன பிடிக்கிறதுக்கு..”

அவன் பதிலில் மெதுவாக கண்களை திறந்து அவனை ஓரப்பார்வை பார்த்தவளின் இதழ்களும் சிரித்ததோ என்கிற சந்தேகம் அவனுக்கு… அவள் செய்கையை உள்வாங்கிவாறு மேலும் தொடர்ந்தவனாக 

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now