அத்தியாயம் - 9 💜

31 1 0
                                    

அத்தியாயம் - 9

இருள் சூழ்ந்த வானை நிலவும், நட்சத்திரங்களும் அலங்கரித்து அழகாய் காட்டும் அந்த அழகிய இரவை போல அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலும் செயற்கை மின்விளக்குகளால்

ஜொலித்துக் கொண்டிருந்தது, அந்நேரம் அந்த இடத்துக்கும் அங்குள்ள மனிதர்களுக்கும் சற்றும் பொருந்தாத ஒரு ஜீவன் உள்ளே நுழைந்தது அதன் மனதில் "என்னடா இது நம்ம என்னமோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நெனச்சு உள்ள வந்தா ஒருவேளை இது டென் ஸ்டார் ஹோட்டலா இருக்குமோ பாக்கவே பிக் பாஸ் செட் மாதிரி பிரம்மாண்டமா இருக்கே… அது சரி நமக்கு எதுக்கு இந்த தேவ இல்லாத வேலை நம்ம வந்த வேலைய பாத்துட்டு கிளம்ப வேண்டியது தான்" தன் வாழ்வின் முக்கிய திருப்பம் இங்கு நடந்தேற இருப்பதை அறியாமல் ஹோட்டலின் வாயிலை நோக்கி முன்னேறியது.

ஹோட்டலின் வரவேற்பில் இருக்கும் பெண்மணி அந்த விசித்திர உருவத்தை கண்டு சந்தேகமுற்று "எக்ஸ்கியூஸ் மீ மேடம், நீங்க யாரு இங்க ரூம் ஏதும் புக் பண்ணி இருக்கீங்களா? உங்களுக்கு எதுவும் உதவி தேவைப்படுதா? உங்களோட ரூம் நம்பரும் அடையாள அட்டை ஏதாவது இருந்தா காமிச்சீங்கன்னா நானே உங்களையும் ரூம்ல விடுறேன்" என்று அவர் தன்மையாக கூறினார்.

"இல்ல நான் ரூம் எதுவும் புக் பண்ணல, என்னோட பிரண்ட பாக்க வந்தேன் நான் பாத்துட்டு போயிடுறேன் பாய்" என்று கூறிய நகர போனவளை

"சாரி மேம் அப்படி எல்லாம் யாரையும் நீங்க போயி இங்க பார்க்க முடியாது, நீங்க யாரை பாக்கணும்? அவங்களோட ரூம் நம்பர் டீடைல் சொல்லுங்க நானே அவங்கள பர்சனலா கால் பண்ணி கேட்டு அவங்க ஓகே சொன்னா உங்கள அனுமதிக்கிறேன்" என்று கூறினார்

அய்யய்யோ இது என்ன முதலுக்கே மோசமா போச்சு இந்தம்மா  போன போட்டு சொன்ன அந்த பக்கிக்கு எப்படி சப்ரைஸ் கொடுக்கிறது, சரி சமாளிப்போம் "அதாவது மேடம், அவர் பேரு ஜாக்கிசான் என் பேரு ஜூலி எங்க தாத்தா ஒரு மந்திர கல்ல அந்த பயபுள்ளட்ட கொடுத்து பத்திரமா வைக்க சொன்னாரு, ஆனா பாருங்க அந்த லூசு அந்த மந்திர கல்ல தொலைச்சிருசி, நான் அவன விட புத்திசாலிங்கிறதால அந்த கல்லை கஷ்டப்பட்டு எப்படியோ கண்டுபிடித்து கொண்டு வந்துட்டேன் நீங்க கொஞ்சம் விட்டீங்கன்னா நான் போய் இந்த கல்ல அவன் கிட்ட கொடுத்துட்டு குடுகுடுன்னு ஓடி வந்துடுவேன்" இன்று சம்மந்தமே இல்லாமல் ஒரு பதிலை கூற அந்த வரவேற்பாளர் குழம்பி யோசனையில் இருந்த போது "அப்படியே நீங்க கொஞ்சம் நிதானமா யோசிங்க நான் போய் குடுத்துட்டு வந்துடறேன்" என்று ஓடப் போனவளை சற்று நேரத்தில் சுதாரித்த அந்த வரவேற்பாளர் சந்தேகத்துடன் "செக்யூரிட்டி" என்று  சத்தமாக கத்தினார்.  

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Tempat cerita menjadi hidup. Temukan sekarang