அத்தியாயம் - 12 💜

34 2 0
                                    

அத்தியாயம் - 12 💜

"நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு...

நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்"

என்று பாடிக் கொண்டே கையில் ஒரு ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை வைத்துக்கொண்டு "என்ன இவ்வளவு நேரமா யோசிக்கிற ஒரு ஐடியா கூடவா கிடைக்கல? வேஸ்ட் கதர் நீ" என்று கூறிக் கொண்டே தன் நண்பனை ஒரு பார்வையும் ஐஸ்கிரீமை ஒரு மிடறும் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் செய்கையில் கடுப்பான கதிர் "பிரச்சனை உனக்கா? எனக்கா? என்னமோ எனக்கு பிரச்சனை மாதிரி நான் வந்து உன் கால்ல விழுந்து உதவி கேட்கிற மாதிரி அதுவும் என்னோட காசுல ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்க..." என்று கேட்க "நண்பன்னு நீ எதுக்கு அப்புறம் கூட இருக்க? நண்பன்னா என்ன தெரியுமா? நம்மளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அந்த பிரச்சனையை முழுக்க நம்ம நண்பன் கிட்ட தள்ளிவிட்டு நம்ம மூளையை பிரஷா கூலா வச்சுக்கணும்... எப்படியும் நீ யோசிச்சு நல்லா தீர்வை தருவ எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு... எனக்காக நீ உயிர கூட தருவேன் தெரியும் கதிரு" என்று அவன் தோள்களை தட்டிக் கொண்டு பதில் கூறினாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் "இப்ப உனக்கு அங்க போய் வேலை பார்க்கிறதுல என்ன பிரச்சனை? ஏன் நடந்த பிரச்சனையில உனக்கு பிடிஎஸ் புடிக்காம போய்ட்டாங்களா?" என்று கேட்டான், அவனை ஒரு ஏளன சிரிப்புடன் பார்த்தவள் "ஒரு தடவை நீ BTS-க்கு ஃபேன் ஆயிட்டேனா நீயே நினைச்சாலும் அதிலிருந்து வெளியே போக முடியாது நம்ம பயபுள்ளைங்க பாசத்தாலே கட்டிப்போட்டுருவானுங்க, அதெல்லாம் உனக்கு புரியாது" என்று கூறிக்கொண்டே பெருமூச்சு விட்டாள்.

"அப்போ நீ அங்க போகாததுக்கு காரணம் டேயங்கா?" என்ற கதிரின் கேள்வியில் தடையின்றி உள்ளே சென்று கொண்டிருந்த பனிக்கூழ் பாறாங்கல்லை விழுங்கியதைப் போன்று தொண்டையிலேயே நின்றது, விழிகள் அங்கும் இங்கும் அசைய மறுத்து மேஜையில் இருக்கும் பனிக்கூலை கூர்மையாக நோக்கியது, சில வினாடிகள் அமைதி நிலவ கேள்விக்கு பதில் வராததால் திரும்பவும் கதிர் "ஏய் உன்ன தான் கேட்கிறேன் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று மீண்டும் வினவினான்.

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Opowieści tętniące życiem. Odkryj je teraz