அத்தியாயம் - 33 💜

46 3 3
                                    


🎶🎶 Snowflakes are falling
And you are getting farther away
I miss you… I miss you
How much more do I have to wait?
How many more days do I have to stay up all nights?
Until I can see you?
Until I can meet you?

Until this cold winter ends
And the spring comes again
And until the flowers bloom again
Please stay there a little longer
Please stay there… 

மிதமான ஒலியில் BTS-ன் Spring Day பாடல் இதமாக ஒலிக்க மகிழுந்தை இயக்கிக் கொண்டிருந்தவனின் உதடுகளும் அந்த பாடலை தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தது… 

ஜன்னலின் வழி கடந்து சென்ற மரங்களையும்,  கட்டிடங்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் துருதுருவென வேடிக்கை பார்ப்பதை போன்று அவள் கண்கள் ஒரு பிம்பத்தை காட்டினாலும் அவள் செவிகள் ஏனோ மெலிதாக முணுமுணுத்து கொண்டிருந்த ஆழ்ந்த அவன் குரலில் தான் முழு கவனத்தையும் தீட்டி வைத்திருந்தது.. 

விழிகள் அவனைப் பார்க்க ஆயிரம் தயக்கம் கொண்டாலும் செவிகள் அவனை சுற்றி தான் வட்டமடித்து கொண்டிருந்தது.. திடீரென அவன் குரல் செவிகளை எட்டாமல் போக மீண்டும் அவன் குரலுக்காக சிறிது நேரம் காத்திருந்தவள் ஏமாற்றத்தை தழுவ அவள் முகமும் சரி விழியும் சரி சட்டென வாடி போக அதை கண்டு கொண்டவன் மீண்டும் பாடத் தொடங்கினான்.. 

அவன் குரல் மீண்டும்  செவிப்பறையை நிறைக்க அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த கருவிழிகள் செவிகளின் தேடல் கிடைத்ததில் அமைதியானது, இதழில் சிறிய புன்னகையோடு.. இத்தனைக்கும் அவள் மகிழுந்தில் ஏறியதில் இருந்து அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.. ஆனால் அவளின் சிறு சிறு அசைவுகளை கூட அவன் விழிகள் உள்வாங்கிக் கொண்டுதான் இருந்தது… 

“என்னை பாட சொன்னா நானே பாட போறேன் எதுக்கு திருட்டுத்தனமா கேக்கணும்..” ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தபடியே அவன் கூற.. அவன் அவளைக் கண்டு கொண்டதில் சிறிது அதிர்ந்தாலும் அவனை நோக்கி திரும்பி “என்ன பண்றது மிஸ்டர் டேஹூயங்.. நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் எனக்குள்ள இருக்க பேன் கேள் என்னையும் மீறி அடிக்கடி வெளியே வந்துட்ரா..” நான் இப்போதும் கூட உன்னை  ஐடல்லாக மட்டுமே ரசிக்கிறேன்.. உனக்கும் எனக்கும் ஐடல் ரசிகை உறவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அவனுக்கு உணர்த்துவது போல் இருந்தது அவளின் பதில்..

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜Where stories live. Discover now