அழகான ஓர் இரவு நேரம், சிலு சிலுவென பூங்காற்று, எங்கும் பசுமை நிறைந்த மலைப்பிரதேசம், மூலிகை வாசமும் மலர் வாசமும் சூழ்ந்திருக்கும் ஒரு அழகான நந்தவனம், சூரியனின் தாக்கம் குறைந்து இரவினை ஆட்கொள்ளும் நிலவின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது.
நில ஒளியில் மிளிரும் நட்சத்திரங்களைகண்டவாறே இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள் நாயகி.
நாம் வாழும் சூழ்நிலை சரியாக இருந்தால் நம் மனமும் சந்தோஷமாக இருக்கும் அப்படியே அந்த ரம்மியமான இரவை, ஊஞ்சலில் அமர்ந்தவாறு ரசித்துக்கொண்டிருந்தாள்.
பின்னிருந்து யாரோ ஊஞ்சலை ஆட்டுவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தவள் திகைத்துப் போனாள்.
அங்கே அளவான உயரத்தில் அழகான தோற்றத்தில் சிரித்த முகத்துடன் அவன் நின்றிருந்தான்.
பார்த்ததும் பதறியவாறு, ஐயோ நீங்களா நீங்க எப்படி இங்க வந்தீங்க அதுவும் இந்த நேரத்துல.
ஏன் நான் வர கூடாதா, என்ன காலமா இருந்தா என்ன..? என்ன நேரம் இருந்தால் என்ன..உன்ன பாக்கணும் நான் நினைச்சுட்டா ஏழுமலை ஏழுகடல் தாண்டியும் வந்துடுவேன்.
அது சரி உங்ககிட்ட வசனம் பேச சொல்லியா தரணும், பேசியே ஆளை மயக்குறவர் ஆச்சே நீங்க. இப்ப சார் இங்க வந்ததற்கான காரணம் என்னவோ.
உன்ன பாக்க எனக்கு எதுக்கு பாப்பா காரணம் எல்லாம்..பாக்கணும்னு தோணிச்சி உடனே ஓடி வந்துட்டேன்.
வருவீங்க வருவீங்க யாராவது பாத்துட்டா என்ன ஆகிறது.
என்ன ஆகும் கல்யாணம் ஆகும். ஏண்டி உன்ன பாக்க இவ்வளவு ஆசையா வந்து இருக்கேன் கிட்ட வராம அங்கேயே நின்று இருக்க.
இல்ல இல்ல வேணாம்.. நீங்க அங்கேயே இருங்க நான் இங்கேயே இருக்கேன் அதான் நமக்கு நல்லது.
அட இங்கே வாடி..னா கதை பேசிட்டு இருக்கே! என்று அருகில் இருந்தவளை, பின்னிருந்து அணைத்தான்.
காதல் ஜோடிகள் இருவரும் தன்னை மறந்து அந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர் ♥️♥️🌌🌝🌜
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)