ஏன்.. அண்ணா, இப்போ உங்க friend எப்படி இருக்காரு...? இப்ப பூரணமா குணமாயிட்டாரா..!?
இப்போவது மனஷன் திருந்தினாரா இல்லையா..?
அத நீ அவன் கிட்டயே கேட்டுக்கோமா..!
என்ன சொல்றிங்க அவரும் இங்க வந்து இருக்காரா..?
ஆமா..மா
எங்க அவரு கூப்புடுங்க ஒரு தடவ பாக்கனுமுனு நான் நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆன முடியல இப்போ வர சொல்லுங்க.
எங்க இருந்து கூப்புடுறது அதான் உன் முன்னாடியே நிக்குறானே.
அவள் எதிரில் நிற்பது ராகவன் தான்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் முழித்தாள்.
என்ன..ம்மா முழிக்குற நீ காப்பாத்தினது வேற யாரும் இல்லை ராகவ் தான்.
அதிர்ச்சியில் அவள் உறைந்து போனாள்..
வார்த்தை வராமல் தடை பட்டு திக்கி திணறி.
அ....... ண்ணா நீங்க என்ன சொல்றீங்க சும்மா விளையாடாதீங்க.. அது கண்டிப்பா அவரா இருக்காது சும்மா சொல்லாதீங்க...
அவர்கள் இருவரும் அமைதி காத்தனர்.
விழித்திரையில் கண்ணீர் மணிகள் நிறைய..அவனிடம் உண்மையா என்பது போல் தலையாட்டி கேட்டாள்.
ஆம் என அவன் கண் அசைத்தான்...
உணர்ச்சியின் வெளிப்பாடாய் உடைந்து அழுதவள்..ஓடிச் சென்று அவனை ஆரத் தழுவினாள்.
தீயில் இட்ட புழுவென கதறி துடித்தாள்.
அவன் அங்கமெல்லாம் தொட்டுப் பார்த்து. உறுதிப்படுத்திக் கொண்டாள்.. பதட்டத்திலும் பயத்திலும் அவளது உடல் நடுங்கியது..
கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்கும் தன்னவளை ஆற தழுவி நிலைப்படுத்தினான்.
அம்மு.... இங்க இங்க பாரு நான் சொல்றதை கேளு எனக்கு ஒன்னும் இல்ல.. தயவு செஞ்சு அழுவாத நீ பதட்டப்படாதம்மா.
இல்லை ராகவ் அன்னிக்கி நான் பார்த்த காட்சி இப்பவும் என் கண்ணுல வந்துட்டு போது...