Part-19
சுயநினைவிழந்து இருந்தவன் கைகள் தன்னிச்சையாக அவளது கரத்தை பிடித்தது.
இருவரது கரமும் இறுக்க பற்றிக் கொண்டது.. அவன் இரு விழியின் ஓரத்தில் ஈரம் கசிந்தது...
அவனை ஒரு முறை கூர்ந்து கவனித்தாள்.
ஆறு அடி ஆண்மை நிறைந்த உருவம். ஆனால் உடல் சோர்வுற்று காணப்பட்டது.. வாடிய முகம், அடர்ந்த கேசங்களாலும் தாடியாலும் மறைக்கப்பட்டு இருந்தது.
அவனை பார்க்கும்போது நிலை தடுமாறி உள்ளான் என்பதை நன்றாக யோசிக்க முடிந்தது...தொலைந்து போன தனது ஆருயிர் பொருள் ஒன்றை தேடி ஆண்டவன் கையில் கொடுத்து பத்திரப்படுத்திக் கொள் என்று சொல்வது போல் ஒரு இனம்புரியா உணர்வு.
அவள் விவரம் அறியாத பதின் பருவத்து பெண்ணாயினும்.
துவண்டு கிடக்கும் தன் பிள்ளையை தேற்றத் துடிக்கும் தாய் உள்ளம் போல் அவள் உள்ளம் துடித்தது.அடர்ந்த அவன் கேசத்தை வருடிவிட்டாள்.. இவள் கண்ணின் ஓரம் கண்ணீர் கசிந்தது..
நீங்க யாரு என்ன? எனக்கு எதுவும் தெரியாது.. நீங்க ஏன்? இப்படி இருக்கீங்கன்னு எனக்கு புரியல..
ஆனா உங்களுடைய இந்த நிலைமை பார்த்ததும் என் மனசுல ஏதோ ஒரு நெருடல்..
எந்த கவலையாய் இருந்தாலும் சரி மனசுக்குள்ள போட்டு அழுத்திக்காதீங்க..
நீங்க அழுவுறதுனாலையோ.. இல்ல நீங்க உங்களையே அழிச்சுக்கறதுனாலயோ, போன எதுவும் திரும்பி வந்து விடாது....
ப்ளீஸ் தயவு செஞ்சு நீங்க மாறுங்க.....
இந்த குடிப்பழக்கம் வேண்டாம்......
உங்களை நினைச்சு வருத்தப்படுறவங்களை விட்டு நீங்க ஏன்? விலகி வரீங்க.. அன்புக்கு மதிப்பு கொடுங்க
அம்மா அப்பா ஆசை படுற ஒரு பையனா இருங்க.....அடுத்த முறை உங்கள என் வாழ்க்கையில பார்ப்பேனா என்ன எனக்கு தெரியல.. ஆனா நீங்க கண்டிப்பா அப்போ ஒரு நல்ல மனுஷனா தான் இருக்கணும்.....
