கல்லூரியை வந்தடைந்தாள் செண்பா, இயல்புக்கு மாறாக இன்று அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். மனமும் முகமும் பூரிப்பில் பூத்துக் குலுங்கியது.
எப்பொழுதும் போல் இல்லாமல்,இன்று கல்லூரி ஏதோ ஒரு வகையில் களைகட்டி தான் இருந்தது. ஆயிரம் விதிமுறைகள் நாம் விதித்தாலும் கல்லூரி காலத்தில் காதலர் தினம் ஒரு மறக்க முடியாத ஞாபகமே.
அவள் கண்கள் காணும் இடமெல்லாம் காதல் ஜோடிகளே நின்றிருந்தனர். காதல் புறாக்கள் அங்கங்கே நின்று தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
இன்னும் சில பேர் இன்று தங்கள் காதலியிடம் தங்கள் காதலை வெளிப்படுத்த காத்திருந்தனர்.
ஆயிரம் சரி தவறுகள் என்று நாம் வாதாடினாலும் காதல் தரும் அனுபவமே ஒரு தனி சுகம் தான். சில பேருக்கு அது துன்பமும் சில பேருக்கு அது சந்தோசத்தையும் தரலாம். அது நம் தேர்ந்தெடுக்கும் நபரை பொறுத்தது.
வாலிப பருவத்தில் காதல் என்பது ஒரு கடந்து விடமுடியாத hormone பிரச்சனையே. காதலிப்பவர்கள் தப்பானவர்களாக இருக்கலாம் ஆனால் காதல் என்றுமே தப்பானதாக இருந்து விட முடியாது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கரைத்திட்ட காதல் கதை பல உள்ளது. சிலருக்கு அது வெற்றியை தந்திருக்கிறது சிலருக்கு அது தோல்வியை தந்து இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் துணையில் நாம் சரியாக இருந்தால் காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிகரம் தொடலாம்.
வழியில் தனது வேறு துறை தோழி ஒருத்தியை பார்த்தாள். அவள் வெளியே சென்று கொண்டிருந்தாள்.
வர்ஷா என்ன காலையில காலேஜ் குள்ள இருந்து வெளியே போற . ஏதாவது மறந்துவிட்டு வந்துட்டியா என்றாள்.
அவளோ சிரித்தபடி ச்ச ச்ச இல்லடி நான் இன்னிக்கு என் ஆள் கூட....வெளியே போறேன் டி
என்ன! காலேஜ் டைம்லயா..? தப்பில்ல
என்னடி பழம் மாதிரி பேசுற. வீட்டுக்கு தெரியாம போகணும்னா காலேஜ் டைம்ல தான போயாகணும்.
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)