part -26

23 2 0
                                    


       இடம் செண்பாவின் தாத்தா வீடு அந்த  வீடே  பரபரப்பாக இருந்தது.
ஆளாளுக்கு ஒரு வேலை என அனைவரும் பிஸியாக இருந்தனர்.

அடுபடியில்  பெண்கள் சமையல் வேலையில் இருந்தனர்

வயதில் மூத்தவர்கள் ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.

இளம் ஆண்கள் எல்லாம் பரபரப்பாக வெளியில் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறுசுகள் ஆட்டம் பாட்டம் என அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

சமையற்கட்டில் பலவித உணவின் மணம் கமழ்ந்தது.

இல்லம் முழுக்க சந்தோஷ கோலகுலம்  குடிகொண்டு இருக்க.

இங்கே ஒருத்தி மட்டும் கண்ணீர் கோலமாய் அமர்ந்திருந்தாள் .

ஆம் இன்று செண்பாவை பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. இது அவளுக்கு அதிர்ச்சியான தகவலாகவே இருந்தது.

அன்று  நடந்த சம்பவத்திற்கு பிறகு ராகவ் இவளை மிகவும் கவனமோடு நடந்து கொள்ள சொன்னான்.

செண்பாவிடம் ஓரளவுக்கு அவளுக்கு இருக்கும் பிரச்சனையை புரிய வைத்தான்.

இந்த சொத்து பிரச்சனையை அவளுக்கு புதிராத புதிராகவே இருந்தது.

சிறு வயதில் தாத்தாவின் செல்லப்பேத்தி அல்லவா. அதனாலேயே  அவள் அன்புக்கு அடிமையாகி இவ்வளவு பெரிய பரிசினை அவளுக்கு வழங்கி உள்ளார்.

மேலோட்டமாக பிரச்சினையை தெரிந்து கொண்டவளுக்கு அதில் இருக்கும் ஆழம் புரியவில்லை.

தெரியப்படுத்தவும் ராகவ் விரும்பவில்லை.

அதன் பிறகு அவன் மேலும் பாதுகாப்பு அதிகப்படுத்தினான்.  அவள் தந்தையிடம் பேச  அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஆனால் தற்பொழுது அங்கே நிகழும் சில பிரச்சனைகளால் இப்பொழுது அவருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என சிறிது விலகி இருந்தான்.

தவமின்றி கிடைத்த வரமேWo Geschichten leben. Entdecke jetzt