கோவிலில் செண்பாவை பார்த்த ராகவ் அவள் பின்னாலேயே சென்று முகவரி அறிந்து கொண்டான்....
அவளை தினமும் பின்தொடர்ந்து அவள் படிக்கும் பள்ளியில் இருந்து செய்யும் வேலைகள் வரை அத்தனையும் கண்காணித்தான்....
அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் அவள் பயந்த சுபாவம், குடும்பத்திற்கு ஒன்றிய குணமும், சின்ன பெண்ணாகவும் இருப்பதால்..
தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவன் அவளை தொந்தரவு செய்யாமல் ஒருதலையாகவே காதலித்தான்....இவ்வளவு சூழ்நிலையில் அவளை நெருங்கி விட மனது துடித்தாலும் தன்னால் அவள் எந்த வகையிலும் காயப்படக்கூடாது என்பதற்காகவே அமைதியாக இருந்தான்.
காதலாகி கசிந்து, ஒருவரோடு ஒருவர் உறவாடி அன்பை பரிமாறிக் கொள்ளும் காதல் ஒரு சுகம் எனில்...
காத்திருந்து, மற்றவரை துன்புறுத்தாமல், ஒருவரை ஒருவர் ஸ்பரிசிக்காமல்.. விலகி நின்று உணர்வதும் ஒரு காதல் தான்...
இப்படி உன்னை பத்தி ஒவ்வொரு விஷயமா நானே தேடித்தேடி கண்டுபிடிச்சு தெரிஞ்சுகிட்டேன்...
உன்ன பார்த்ததும் பிடிச்சு போச்சு, உன்னோட குணங்கள் தெரிய தெரிய இன்னும் உன்ன ரொம்ப புடிச்சு போச்சு.
மொத்தமா நான் உன்கிட்ட சரண்டர் ஆகிட்டேன்.
முழுசா நீ எனக்குள்ள வந்த பின்னால தான்... எனக்கு accident விஷயம் தெரியும்
ஒரு மாலை பொழுது பகலவன் பூமியை ஆண்டு முடித்துவிட்டு நிலவு மகளிடம் ஓப்படைத்து சென்று இருந்தார்.
கல்லூரி விடுமுறை நாள் என்பதால்.. அன்று முழு நாளும் செண்பாவும் பின்னாலே அலைந்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் ராகவ்...
இருண்ட தன் அறையை ஒலி கூட்டி உள்ளே நுழைந்து முதுகில் யாரோ இருவர் பலமாக அடித்தனர்....
திரும்பிப் பார்க்க தன் ஆருயிர் தோழர்கள்.. குரு, தேவா....
தேவ்....... குரு.. எப்படா வந்தீங்க? எப்படி இருக்கீங்க..?
