அன்று கல்லூரியில் கால் வழுக்கி கீழ விழுந்ததில் செண்பாவிற்கு லேசாக கால் சுளுக்கியது . ராகவ் அவளை உடன் இருந்து மருத்துவம் பார்த்து ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பும் வரை அவளை பத்திரமாக பார்த்துக் கொண்டான்...
வீட்டிற்கு சென்றவுடன் அவளது அப்பா அம்மா மேலும் வருந்தினர். இவளை ஓய்வெடுக்குமாறு வற்புறுத்தினர். அதனால் இவள் ஒரு நாள் கல்லூரி விடுமுறை எடுத்துக்கொண்டாள்.
இன்று வழக்கத்தை விட சீக்கிரமாக செண்பா கல்லூரி வந்தடைந்தாள்..
கல்லூரியில் மாணவர்கள் யாரும் இன்னும் வராததால். வளாகம் முழுவதும் அமைதி நிலவியது.
சலனமற்று இருந்த அந்த கல்லூரியில் இவளுக்கு மிகவும் பிடித்த எழில் சூழ்ந்த கார்டனில். தன் தோழியர்கள் வரும் வரை அமைதியாக அமர்ந்து இளைப்பாரிக் கொண்டிருந்தாள்.. அமைதியான அந்த சூழலில் அவளுக்கு தன்னவனின் நினைவு வந்தது அன்று இவளை ஆட்டோ ஏற்றி விடும் பொழுது பார்த்தது. நேற்றும் அவள் கல்லூரி வரவில்லை. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவனை முழுதாக ஒரு நாள் முழுவதும் காணவில்லை. இன்றும் விரைவில் வந்து விட்டதால் அவனை பார்க்க முடியவில்லை. அவள் விழி இரண்டும் அவனைக் காண ஏங்கியது.
செண்பவிற்கு ஒரு பழக்கம் உள்ளது. அவள் நன்றாக ஓவியம் தீட்ட தெரிந்தவள். ஆகையால் சிறுவயதிலிருந்தே அவள் வாழ்க்கையில் விரும்பும் சிலவற்றை, கிடைக்காமல் ஏங்கும் சிலவற்றை படமாக தீட்டி வைப்பாள்.
இந்தப் பழக்கம் நாளடைவில் பெருகி அவளுக்கு வரும் கனவுகளை அப்படியே படமாக தீட்டி வைப்பாள். நன்றாக தமிழ் வளமும் அவளிடம் இருந்ததால். அந்த காட்சியினை அப்படியே தன் எழுத்துக்களில் ஒரு கதையாக எழுதி வைப்பாள். இந்தப் பழக்கம் அவளுக்கு தனிமையை போக்கிக் கொள்ள உதவியது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க வேண்டிய காயங்களும், வலிகளும் நிறையவே உள்ளன. ஒரு சிலர் அந்த காயங்களையும் வலியையும் தனிமையையும் நினைத்து நினைத்து தங்கள் மனதை தாங்களே காயப்படுத்தி சுய கட்டுப்பாட்டை இழக்கின்றனர். அதற்கு பதிலாக இப்படி ஏதேனும் ஒரு மனதிற்குப் பிடித்த விஷயங்களால் நம் புத்தியை திசை திருப்பினால்.. கவலைப்படவோ வேதனை படவோ நேரமே இல்லாமல் போகும். இந்தப் பழக்கமும் செண்பாவிற்கு அது போன்றது தான்.