ராகவ் செண்பா இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க..
கண் முன்னே அழகான ஒரு காதல் காவியம்.
இவ்வளவு அழகான ஒரு ப்ரொபோசலை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.அங்கிருந்த மாணவர் பட்டாளத்திற்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இன்று, இப்படி ஒரு நிகழ்வை அவர்கள் யாரும் எதிர்பார்த்தும் இருக்க மாட்டார்கள். ஒரு ஆண் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்வதே பெரிய விஷயம் அதுவும் இவ்வளவு அழகாக ரம்யமாக மற்றவர் முன்னிலையில் தன்னவளிடம் காதலை கூறுவது மிகவும் ஆச்சரியமாக இருந்தது ❤️.
இங்கே ராகவ் மற்றும் செண்பாவின் நண்பர்கள் இவர்களை கண்டு சந்தோசபட்டனர்.
ஆனால் நல்லவர்களுக்கு உடனே நல்லது நடந்து விட்டால் பிறகு விதிக்கு என்ன வேலை.
இங்கே இவர்களின் எதிரிகள் சிலர் இந்த நிகழ்வு கண்டு பொறாமை பட்டனர்.
அங்கிருந்த பெண்களில் பலருக்கு செண்பா மீது பொறாமை தான் வந்தது. இன்னும் சிலர் ராகவை கேலி செய்தனர், இன்னும் சில பேர் புரளி பேசிக் கொண்டிருந்தனர்.
ஏய் இதுக்கு வந்த வாழ்வ பாத்தியாடி!
அதானே! இவனுக்கு எப்படி இவள பிடிச்சது.
நம்ம இவனை சுத்தி சுத்தி வரும் போது எல்லாம் கண்டுக்காம போனான்..நான் கூட பணத் திமிருன்னு நினைச்சேன் ஆனா இவ கிட்ட இப்படி மண்டி போட்டு உக்காந்து இருக்கான்..
மச்சான் இவன் taste என்னடா இவ்ளோ கேவலமா இருக்கு..ஊருல இருக்க எல்லா பொண்ணுங்களும் இவன் பின்னாடி சுத்துது.. இவன் போய் இவ பின்னாடி சுத்தி இருக்கான் பாரு
எனக்கு என்னமோ இதுல ஏதோ ஒரு இக்...கு இருக்கும்னு தோணுது.
என்னடா சொல்ற , அட ஆமா மச்சி போன வருஷம் கூட ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்ட மணி கணக்கா பேசி ப்ரொபோஸ் பண்றேன்னு சொல்லி கடைசியில் அதை ஜாலிக்கு பண்ணாங்கன்னு மாத்திட்டாங்களே..என்ன ஞாபகம் இல்ல உனக்கு.
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)