செண்பாவை எப்படியாவது கடத்தி பலவந்தப்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த தங்கவேலுவின் கனவை தவிடு பொடி ஆக்கிவிட்டான் நம் நாயகன்....நேரடியாக இறங்கினால் எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என மறைந்திருந்தே இவ்வளவு நாட்கள் காயை நகர்த்தினான்...
அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் இம்மி அளவும் செண்பாவை நெருங்க முடியவில்லை..
வேறு வழி தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவனுக்கு செய்தியாக செண்பா அவனது ஊர் வந்தது தெரிய வந்தது...
சென்னையில் விட்டதை மதுரையில் பிடிப்போம் என கிளம்பி வந்து விட்டான்...
மற்றவர் பார்வையில் தங்கள் தந்திரம் சிக்காமல் எப்படி அவளை தன் வசப்படுத்துவது எப்படி என்று தாயும் மகனும் அமர்ந்து சதி ஆலோசனை செய்தனர்.
டேய் நீ எல்லாம் ஒரு ஆம்பளையாடா...
ஒரு சின்ன விஷயம் இத கூட உன்னால முடிக்க முடியல...மா....... தெரியாம பேசாதமா நானும் எவ்வளவு முயற்சி பண்ணேன் தெரியுமா.
அட....ச்சீ ... வாய மூடு நாலு போடு போட்டமா கைய கால கட்டி தூக்கிட்டு வந்தமா தாலி கட்டினோமா இல்லாம வெட்டி நியாயம் பேசிட்டு இருக்கான்.
சொல்றது ஈசிம்மா அங்கிருந்து பார்த்தால் தான் தெரியும்...
ஏன்டா அவங்கள பத்தி எனக்கு தெரியாதா என்ன.... வாயில்லா புள்ள பூச்சிங்க படிச்சவங்க வேற தேவையில்லாம வம்பு சண்டைக்கு போக மாட்டாங்க சாதுவான அவங்கள புடிக்கவே உனக்கு துப்பு இல்லை ..
இந்த இடத்துல தான் நீ தப்பு கணக்கு போடுற..... அவங்கள நீ சாதாரணமா எடை போட்டுட்ட... அவங்களுக்காக வேலை செய்ய ஏகப்பட்ட பேர் இருக்காங்க...
24 மணி நேரமும் அவள சுத்தி பாதுகாக்கிறாங்க.. நாம எந்த வழியிலாவது அவள நெருங்க நினைச்சா வெறி புடிச்ச நாயி மாதிரி வேட்டையாடுகிறார்கள்.....
நாம நெனச்சா மாதிரி அவ சாதாரணமானவ இல்ல... அவளுக்காக சில பேர சம்பாதித்து வைத்திருக்கிறா..... அங்கு இருக்கிற வரைக்கும் அவள நெருங்குறது கனவில் கூட நினைக்காத விஷயம்...
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)