வந்திருந்த புது சொந்தங்களாலும், அங்கிருந்த பழைய சொந்தங்களாலும் அந்த வீடே இன்பக் கோலத்தில் காட்சி அளித்தது.
மதியழகன் எப்படி? சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் முழித்தவனுக்கு அவளது வேலையை இவ்வளவு எளிமையாக மாற்றி விட்டான் அவளவன்.
அவள் உயிரானவனை நினைக்கும் போது இதழில் புன்னகைப் பூ தானாக பூத்தது.
மதியழகனிடம், உங்ககிட்ட எப்படி? என் சூழ்நிலையை புரிய வைக்க போறேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா, இது இவ்ளோ ஈஸியா இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல. அதுக்கு உங்களுக்கு தேங்க்ஸ்.
ஐயோ..!! எனக்கு எதுக்குங்க தேங்க்ஸ் உண்மையிலேயே உங்க ஆளுக்கு தான் நீங்க தேங்க்ஸ் சொல்லணும்.. எவ்வளவு அழகா உங்கள எந்த கஷ்டமும் பட விடாம அவரே எல்லாத்தையும் பாத்துக்கிட்டாரு. really he is gentle man.
yes..... my man is always a gentle man...
அவனது அன்பில் ஒவ்வொரு நாளும் கரைந்து தான் போகிறாள்.. தேனாக இனிக்கும் காதலே இவளுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறான்.
இவளுக்கான பாதுகாப்பு அரணாய் எப்பொழுதும் அவன் இருக்கிறான்.
மேலே சென்ற இருவரின் நிலை தெரியாமல் கீழே அவளது தோழியர் துடித்துக் கொண்டிருந்தனர்.
செண்பாவின் பள்ளி தோழிகளில் அவளுக்கு மிகவும் நெருங்கியது இருவர் மட்டுமே.
ஒருத்தி அவள் கல்லூரியிலும் தொடரும் தோழி சூர்யா, மற்றொருத்தி பூங்குழலி... இவ்விருவரும் அவளது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்களே.
பூங்குழலி செண்பாவின் அன்னையின் தோழி மகள்..
ஏய்... சூர்யா மேல என்னடி இவ்வளவு நேரம் ஆகுது என்ன நடக்குதுன்னு தெரியலையே...
அதானே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல, நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு சொல்றதுக்கு இவ்வளவு நேரமா..? ஒருவேளை குழலி, பயத்துல எதுவுமே சொல்லாம அமைதியா நின்னுட்டு இருக்காளோ..!?