நாட்கள் மெல்ல உருண்டோடின.. செண்பா படிப்பு, வேலை என எப்பொழுதும் பரபரப்பாகவே இருந்தாள்.அடையாளம் தொலைத்து, யாரும் அறியாமல், தன் கூட்டுக்குள் அடிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவளுக்கு.இன்று சுயமரியாதையோடும், தன்னிச்சையாகவும் தைரியமாகவும் தன்னை பார்ப்பதற்கு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது......
தோல்விகள் வந்தால் துவண்டு விடாமல் அவமானங்கள் வந்தால் அடங்கி விடாமல் அதே படிக்கல்லாக்கி முன்னேற கற்றுக் கொண்டாள்.
எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும்.
தன்னவனுக்கென்று நேரம் ஒதுக்காமல் அவள் இருந்ததே இல்லை..தனக்காக எவ்வளவோ செய்த அவன் தன்னிடத்தில் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் தன்னுடனான தனிமை நேரம்.
முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து வெளியேவே வர முடியாது. ஆனால் இப்பொழுது வேலைக்குச் செல்வதால்.. விடுமுறை நாட்களான சனி ஞாயிறு கூட வெளியே வர முடிகிறது.
செண்பாவுடன் அதிகம் நேரம் செலவிட வேண்டும் என்று ராகவ் ஏங்குவான்...அவள் சந்திக்க வரும்போது எல்லாம் நேரம் போவதே தெரியாது. இருவரும் எவ்வளவு நேரம் நன்றாக இருந்தாலும் பிரிய போகும் நேரம் அவன் வாடிதான் போவான்.
செண்பா இன்னும் ஆர் ஜே பயிற்சியிலேயே உள்ளாள்.. விரைவில் அவளுக்கான நிகழ்ச்சி தொடங்கப்படும்..அதுவரை அவளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
கல்லூரியில் வரண்டாவில் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
திடீரென அவளை உள்ளிழித்தது ஒரு கரம்..அது ராகவ் தான் அவளை அறைக்குள் தள்ளி தாழிட்டுக் கொண்டான்.
அவளை இருக்க அணைத்துக் கொண்டான். தாயிடம் அடைக்கலம் தேடும் பிள்ளை போல்.. அவளை அவளிடம் அடைக்கலம் புகுந்தான்.
மெல்லிய புன்னகையை விடுத்தவள். அவனை விலக்காமல் இன்னும் இருக்க பற்றி கொண்டாள்.
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)