part-29

23 2 0
                                    

  இன்றோடு அவர்கள் பார்க்காமல் நான்கு மாதங்கள் முடிந்தது. செண்பா கல்லூரி 2 ஆம் ஆண்டு நிறைவு  பெற்றது.

ராகவும் அவன் கல்லூரி படிப்பை முடித்திருந்தான்.

அது  ஏப்ரல் மாதம் என்பதால் கல்லூரி, பள்ளிகள்  விடுமுறை இருந்தது.

அப்படி ஒரு நாள் செண்பா வீட்டில் எல்லோரும் இருக்க.. செண்பவின் தந்தை  சொக்கலிங்கம் பேச  தொடங்கினார்.

கற்பகம்.... எங்க இருக்க ஒரு முக்கியமான விஷயம் பேசனும் எல்லோரும் இங்க வாங்க என்று அழைத்தார்.

என்னங்க.... என்ன விஷயம்...

ஒண்ணும் இல்ல..ம்மா சித்திரை மாசம் பொறந்திருச்சு... எப்பவும் நம்ம ஊர்ல குலதெய்வம் கோயில்ல இந்த மாசம் திருவிழா நடக்கும்.

அட... ஆமா ...... நான் கூட மறந்தே போயிட்டேன். ஒவ்வொரு வருஷமும் நீங்க ஊருக்கு போயிட்டு வருவீங்க இல்ல இந்த டைம்ல.

ஹ்ம்ம்ம்....  ஊர்ல இருந்து இப்பதான் அழைப்பு வந்து இருக்குது கற்பகம்.....

என்ன திருவிழா பெரியப்பா....... எப்படி இருக்கும் நான் பார்த்ததே இல்லை சொல்லுங்களேன்...

அது..... டா..... கண்ணா ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாசம்.. அம்மனுக்கு  ஜாத்திரை  நடக்கும்.
அது பத்து நாள் திருவிழா, காப்பு கட்டி, கொடியேத்தி, முளைப்பாரி, ஊர் கூடி பொங்க வச்சி, கூழ் ஊத்தி  அம்மனுக்கு தேர் இழுப்பாங்க..
அன்னைக்கு ராத்திரி பூக்குழியும்
இறங்குவாங்க.

இது மட்டும் இல்ல... சின்ன  பிள்ளைங்களுக்காக மஞ்சள் தண்ணி ஊத்துற விளையாட்டு, கும்மியாட்டம்,  கலை நிகழ்ச்சி,  திருவிழா கடைங்க, அது இல்லாம ரங்கராட்டினம், கூத்து கட்டுறது, பொம்மலாட்டம்னு ... ஏகப்பட்டது இருக்கும்....

ஐ......... பெரியப்பா இதெல்லாம் பார்த்ததே இல்ல பெரியப்பா..

ஆமாண்ணே.... சென்னையில் பிறந்து வளர்ந்ததனாலே என்னவோ இதெல்லாம் எங்களுக்கு சினிமா காட்சியா ஆயிடுச்சு.. ஆனா நீங்க ஒரு தடவை கூட இது எல்லாம் என்கிட்ட சொன்னதே இல்லையே

தவமின்றி கிடைத்த வரமேWhere stories live. Discover now