காதல் ஜோடிகள் இரண்டும் கொஞ்சி குழவி தங்களை மறந்து இருக்க.
திடீரென இருவர் பார்வையும் மங்கி.. கண்கள் இருண்டு நிலை குலைந்து சரிந்தனர்.
மனையளின் மயங்கிய நிலையே அவன் கடைசியாக கண்ட காட்சி.
சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தவன்.
தேடியது முதலில் அவளைத்தான்.ஆனால் அங்கு அவளை காணவில்லை.
அவள் உடமைகள் யாவும் அங்கு இருந்தன.
ஆன வெற்றிமுற்ற தேடியும் அவள் ஒருத்தி மட்டும் காணவில்லை.கண்கள் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது. தன்னவளின் நிலை தெரியாமல் தடுமாறினான்.
பதில் அறியாத கேள்வி என பதறி நின்றவனின் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது..
அதில் gprs location உடன்....
தில்லு இருந்தா இங்க வாடா.....
உன் ஆளு இப்ப என் கையில.....
அறிவாளியா யோசிச்சின்னா
அதுக்கப்புறம் நடக்க போற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை......மிக வேகமாக தாமதிக்காமல் குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தான்
இங்க மறு பக்கம் செண்பாவோ முற்றிலும் இருள் சூழப்பட்டிருந்த ஓரிடத்தில். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
என்ன இடம் என்று எந்த ஒரு அடையாளமும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.
சற்று நேரத்தில் இருளில் இரண்டு உருவங்கள் தெரிந்தன முகம் முழுவதும் மாஸ்கிட்டு மறைக்கப்பட்டிருந்த இருவர் அவள் அருகினில் வந்து நின்றனர்.
தான் எங்கு இருக்கிறோம் எந்த சூழலில் மாட்ட பட்டிருக்கிறோம் என்பதை யூகிக்க முடியாமல் அவள் தவித்தாலும்.
தன் குடும்பத்தையும் ராகவையும் நினைத்து அவள் வருந்தினாலும்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் அவள் மனதில் சூழ்ந்தாலும்.
இவை யாவும் வெளிவராமல் அவள் திடமாகவே தன்னை காட்டிக் கொண்டாள்.
ஏனென்றால் நமது பயம் இவர்களுக்கு தீமையாகி விடுமோ என்ற பதட்டம் அவளுக்கு...
