part -24

16 2 0
                                    

நல்ல உறவுக்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் இருக்கும் புரிதலே.

ராகவன் நெடுநாள் தவமான அவன் குடும்பத்தை அவனிடமே சேர்த்தாள்.

தனிமை என்னும் விரகத்தில் இருந்து கொண்டிருந்தவனின் வாழ்க்கையில் தேவதை என வந்தவள். அத்தனை வசந்தத்தையும் அவனுக்கு தந்தாள்.

மெல்ல இரண்டு குடும்பங்களும் சகஜமாக பழகிக் கொள்ள தொடங்கின ராகவின் அப்பா இப்பொழுது அவர் தந்தையிடம் மன்னிப்பு கோரி இணைந்து விட்டார்.

அவர்கள் சென்னையில் இருக்கும் வரை அவர்களது இல்லத்திலேயே தங்கிக் கொள்ள சொல்லி ரத்தினவேல் அவர்கள் கேட்டுக்கொண்டார் அவர் வேண்டுகோளுக்கிணங்கி  அவனது தாய் தகப்பனார் இருவரும் இந்த இடத்திலேயே தங்கி கொண்டனர்.

உறவுகளுடன் சேர்ந்து பழகி சிரித்து மகிழ்ந்து பொழுதை இனிமையாக கழித்தனர்.

அன்று அதுபோன்ற ஒரு நாளே...
கல்லூரி விடுமுறை நாள் என்பதால் பகல் நேரத்தில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

ராகவனின் அண்ணி ஒருத்தி ஏன் தம்பி.. பாப்பா இப்போ எங்க இருப்பா. பேசணும் போல  இருக்கு முடிஞ்சா கூட்டிட்டு வர்றியா..

ஐயோ அண்ணி.. மேடம் இப்ப என்ன பண்றாங்க தெரியல.. எப்பவும் வேலை, work னு பிஸியா இருப்பா. அதனால லீவ் நாள்ல ஃபேமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் நினைப்பா நானும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.

ஓ... பயங்கர  பிஸி போல... ஓகே ப்பா இருக்கட்டும் பரவயில்ல. முடிஞ்சா அப்பறமா ஒரு போன் மட்டும் பண்ணிக் குடுப்பா.

சரியாக அந்த நேரம் செண்பாவிடமிருந்து அழைப்பு வந்தது ராகவிற்கு.

அண்ணி 100 ஆயுசு அவதான் போன் பண்றா.. இருங்க அட்டென்ட் பண்றேன்.

போன் அட்டென்ட் செய்ததும் ஹலோ செண்பா.. என்னடா எங்க இருக்க ஆபீஸ்ல இருக்கியா வீட்ல இருக்கியா.

மாமு.... என்று கலங்கிய குரலில் அவனை அழைத்தாள்.

அவளது குரலைக் கேட்டவனுக்கு கலக்கமாக இருந்தது...

தவமின்றி கிடைத்த வரமேحيث تعيش القصص. اكتشف الآن