part -6

25 2 0
                                    

செண்பாவும் சூர்யாவும் அங்கிருந்து சென்ற பிறகு, ராகவும் அவனுடைய நண்பன் அகரன் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்ப எல்லாம் உன் பிளான் படி தான் போகுதுன்னு சொல்லு.

டேய் மச்சி நான் ஒரு தடவை பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டா அது எப்பவும் மிஸ் ஆனதே இல்ல. எவ்வளவோ விஷயத்தை தட்டி தூக்கி இருக்கேன். இது செய்ய மாட்டனா இதெல்லாம் எனக்கு ஜூஜூபி மேட்டர் தான்...

எல்லாம் சரியா வரும் இல்ல

நீ கவலைப்படாதடா அவளே தன்னால என் வழிக்கு வருவா..

இவ்விருவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை அருகினில் பயந்தவாறு ஒளிந்து கொண்டு வான்மதி கேட்டுக் கொண்டிருந்தாள். ராகவ் பேசியதை கேட்டதும் கோபம் முற்ற  வான்மதி.

அடப்பாவிங்களா  நீங்க எல்லாம் பிராடு பசங்களா.. என்னடா பிளான் பண்றீங்க. நான் வேற உங்கள நல்லவன் என்று நினைத்தேன்..  நீங்க பேசுறதெல்லாம் பார்த்தா எல்லாமே நடிப்பா.. எங்க செண்பாவை என்னடா பண்ணலாம்னு நினைக்கிறீங்க. இல்ல நான் நடக்க விட மாட்டேன். இப்படியே போய் உங்கள பத்தி எல்லாம்  சூர்யா கிட்டயும் சென்பா கிட்டயும் சொல்லி உங்க முகத்திரையை கிழிக்கிறேன்....  என்று கோபமாக திட்டிவிட்டு அவ்விடம் விட்டு ஓடினாள்..

அதிர்ச்சியில் செய்வதறியாமல் உறைந்து போயிருந்தனர் இவ்விருவரும்...

ராகவ் சுதாரித்துக் கொண்டு. ஐயோ மச்சி பிள்ளையார் பிடிக்க குரங்காக போயிடும் போல இருக்கு. இந்த பொண்ணு என்ன மச்சான் நம்ம ஒண்ணு சொன்னா அது ஒண்ணு நினைக்குது. கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்திடும் போலயே.. என்னடா அப்படியே நின்னுகிட்டு இருக்க போய் புடிடா... என்று இருவரும் அவளை துரத்தினர்.

ஓடியவள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.

என்னடி வான்மதி ஏண்டி இப்படி மூச்சு இறைக்க ஓடி வர.

அச்சோ  சூர்யா  உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் ஓடி வரேன்.

தவமின்றி கிடைத்த வரமேWhere stories live. Discover now