மழையில் நனைந்து, பேசி மகிழ்ந்து இருவரும் பொழுதை கழித்தனர்.நேரம் போனது இருவருக்கும் தெரியவில்லை.
மழை அதிகமாக இருந்ததால் தன் காரின் பின் இருக்கையில் அவளுடன் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அழகான மழைக்காலம், கடற்கரை சாலை, பௌர்ணமி நிலவொளி, அவனுடைய மகிழுந்து, அவனது அரவணைப்பில் அவள். இதைவிட வேறு என்ன வேண்டும் அவனுக்கு.
அகண்ட அவன் மார்பினில் அகிலமே மறந்த அழகி தஞ்சம் புகுந்தாள்.
இதுவரை பொறுமை காத்திருந்த அவளது அலைபேசி தன் பொறுமை இழந்து பொறாமையில் அடித்தது.
தன்னை மறந்தவள் சுயநினைவுக்கு வந்து தன் தொலைபேசியைத் தேடி எடுத்துப் பார்க்கையில் அழைத்தது அவளது அப்பா என்றதும் அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு அழைப்பினை எடுத்தாள்.
ஹலோ...... அப்பா சொல்லுங்கப்பா.....
செல்லப்பிள்ளை..... எங்கடா மா இருக்க நேரம் ஆவது மழை வேற பெய்யுது. நாங்க யாராவது வந்து கூட்டிட்டு வரட்டுமாடா கண்ணா..
sorry.... பா நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கணும் பா மறந்துட்டேன்.. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இருந்ததில் டைம் போனது தெரியலப்பா.. நீங்க யாரும் சிரமப்படாதீங்கப்பா நான் பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் இருக்கேன் என் பிரண்டு இருக்காங்க நான் பத்திரமா வந்துருவேன் நீங்க கவலைப்படாதீங்க பா.
சரி.... மா பத்திரமா வீடு வந்து சேரு பாப்பா..... நாங்க எல்லாம் உனக்காக காத்துகிட்டு இருக்கோம்.
நீங்க கவலைப்படாம இருங்கப்பா நான் சீக்கிரம் வந்துடறேன்.....
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
என்னங்க..... ரொம்ப நேரம் ஆயிடுச்சு சீக்கிரம் கிளம்பலாம்.... வீட்ல எல்லாரும் என்னை தேடிட்டு இருக்காங்க... உங்க கூட பேசிட்டு இருந்ததில் எனக்கு நேரம் போனதே தெரியல..... வண்டிய சீக்கிரம் எடுங்க உடனே நான் போகணும்.
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)